சென்னை, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் சொத்துகளை அடமானமாக வைத்து பெறப்படும் கடன்கள் தொடர்பான முக்கிய ஆவணங்களை இனி நேரடியாக அலுவலகத்துக்கு சென்று பதிவு செய்ய வேண்டாம். மின்னணு முறை இதன்படி செப்டம்பர் 15ம் தேதி முதல், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அடமானம் தொடர்பான ஆவணங்களை மின்னணு முறையில், ஆவணதாரரின் நேரடி வருகை தேவையில்லாத வகையில் பதிவு செய்வது கட்டாயமாகிறது. இதன் மூலம் சொத்து அடமானப் பதிவுகளை விரைவுபடுத்துவதுடன், ஒருசொத்து ஏற்கனவே வேறு எந்தக்கடனுக்கும் அடமானமாக வைக்கப்பட்டுள்ளதா என்பதை எளிதாகக் கண்டறிய முடியும். தமிழகத்தில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன்களுக்கு சொத்துகள் பிணையாக வைக்கப்படும் போது, சொத்து உரிமை ஆவணங்களை ஒப்படைத்தது தொடர்பாகவும், கடன் திருப்பி செலுத்தப்பட்டது தொடர்பாகவும் பதிவு செய்யப்படுகிறது. அடமானம் தொடர்பான இந்த ஆவணங்கள் இனி மின்னணு முறையில் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. வில்லங்க சான்றிதழ் இதற்கான உத்தரவை தமிழக அரசின் வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறை வெளியிட்டுள்ளது. செப் 10-தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, செப்டம் பர் 15ம் தேதி முதல் அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களும் இந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். இதன் மூலம் அடமானம் தொடர்பான பதிவுகளும் நேரடி வருகையில்லா டிஜிட்டல் பதிவு முறையின் கீழ் கொண்டு வரப்படுகின்றன. வங்கிகள் கடன் வழங்குவதற்கு முன்பு, குறிப்பிட்ட சொத்து ஏற்கனவே வேறுஒருவருக்கு அல்லது வேறு நிறுவனத்திடம் அடமானமாக வைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்காக வில்லங்க சான்றிதழை முக்கியமாக நம்புகின்றன. நேரடி வருகையில்லாத பதிவு முறை புதிய நடைமுறை மூலம் அடமானப் பதிவுகள் முறையாகவும் உடனடியாகவும் பதிவாகும் என்பதால், சொத்தின் மீது ஏற்கனவே உள்ள கடன் அல்லது அடமான விவரங்களை உறுதி செய்வது மேலும் எளிதாகும். இதன் மூலம் ஒரே சொத்தை வைத்து பல்வேறு இடங்களில் கடன்பெறும் முறைகேடுகளையும் கட்டுப்படுத்த முடியும் என அரசு கருதுகிறது. இந்த நடவடிக்கை தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் 'புராஜெக்ட் ஸ்டார் 3.0' மின்னணு பதிவு தளத்தின் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த டிஜிட்டல் பதிவு தளம் ஆகஸ்ட் 17ம் தேதி தொடங்கப்பட்டது. இதன் முதல் கட்டத்தில், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் மனைகளை கட்டுமான நிறுவனங்கள் முதல் முறையாக விற்பனை செய்யும் போது பயன்படுத்தப்படும் வைப்புத் தொகை உள்ளிட்ட சில ஆவணங்களுக்கு நேரடி வருகையில்லாத பதிவு முறை ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டது. புதியநடைமுறை இதன் தொடர்ச்சியாக, அடமானம் தொடர்பான ஆவணங்களுக்கும் இந்த வசதி விரிவு படுத்தப்பட்டுள்ளது. இதற்கான முடிவு குறித்து செப்டம்பர் 7ம்தேதி சட்டப்பேரவையில் வணிகவரிகள் மற்றும் பதிவுத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நடைமுறைப்படுத்துவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நேரடி வருகையில்லா பதிவுமுறையில், பதிவு அலுவலகத்திற்கு சம்பந்தப்பட்டவர்கள் நேரில் சென்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இருக்காது. பதிவு செய்யப்படும் ஆவணங்களில் பதிவுத்துறை அதிகாரியின் மின்னணு கையொப்பம் இடம்பெறும். மேலும், பதிவு செய்யப்பட்ட ஆவணத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் கியூ.ஆர். குறியீடு இடம்பெறும் வகையில் புதியநடைமுறை வடிவமைக்கப்பட்டுள்ளது. உண்மைத்தன்மை இதன்மூலம் ஆவணம் உண்மையானதா என்பதை பின்னர் எளிதாக சரிபார்க்க முடியும். தமிழக பதிவுத்துறையில் சொத்து தொடர்பான முக்கிய ஆவணங்களின் பதிவு நடவடிக்கைகள் படிப்படியாக முழுமையான டிஜிட்டல்முறைக்கு மாற்றப்பட்டு வருகின்றன. ஆவணங்களை நேரில் சமர்ப்பிக்க வேண்டிய தேவையை குறைப்பதுடன், மின்னணு கையொப்பம், கியூ.ஆர். குறியீடு மூலம் ஆவணங்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்யவும், சொத்துகளின் மீது உள்ள அடமான விவரங்களை தெளிவாகப் பதிவு செய்யவும் இந்த புதியநடை முறை வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/mandatory-from-the-15th-registration-of-loan-mortgage-documents-to-be-done-onlineno-need-to-visit-in-person



