புதுடெல்லி பிரதமர் மோடி, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமை இன்று சந்தித்து இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பாக பேசியுள்ளார். பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். அவருடன் எரிசக்தி, பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தும் வகையில், பிரதமர் மோடி இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதுபற்றி மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட செய்தியில், பிரதமர் மோடி மலேசியாவுக்கு 2026-ம் ஆண்டு பிப்ரவரியில் பயணம் மேற்கொண்டார். மறுஆய்வு அதன் அடிப்படையில், வர்த்தகம் மற்றும் முதலீடு, ராணுவம் மற்றும் பாதுகாப்பு, குறைக்கடத்திகள், உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், எரிசக்தி, நிதிசார் தொழில் நுட்பம், கல்வி, சுற்றுலா மற்றும் மக்களிடையேயான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்து தலைவர்கள் மறுஆய்வு செய்தனர் என பதிவிட்டு உள்ளார். பரஸ்பர நலன் சார்ந்த விசயத்தில், முக்கிய பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்களை பற்றிய தங்களுடைய பார்வைகளை தலைவர்கள் பரிமாறி கொண்டனர் என்றும் அவர் தெரிவித்து உள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/malaysian-pm-holds-talks-with-pm-modi



