தென்காசி, தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் வியாபாரியை காரில் கடத்தி, நகை பறித்த இளம்பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். வியாபாரியிடம் நகை பறிப்பு தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பிரதான கடை வீதியில் உள்ள பஞ்சு மெத்தை கடையில் ஊழியராக வேலை செய்பவர் சந்தானகிருஷ்ணன் (வயது 76). வியாபாரியான இவர் சம்பவத்தன்று மாலையில் கடையில் இருந்தபோது, தலையணை வாங்குவது போன்று வந்த கும்பல் நைசாக அவரை காருக்கு அழைத்து சென்று கடத்தி சென்றது. பின்னர் அவர் அணிந்திருந்த சுமார் 3 சவரன் நகையை பறித்து கொண்டு சந்தானகிருஷ்ணனை காரில் இருந்து கீழே இறக்கி விட்டு சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். நண்பர்கள் மூலம் வியாபாரி காரில் கடத்தல் அந்த விசாரணையில், கடையநல்லூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த சங்கர் மகள் சுபா(19) என்பவர், சந்தானகிருஷ்ணன் வேலை செய்யும் பஞ்சு மெத்தை கடை வளாகத்தில் உள்ள அடகு கடையில் நகையை அடகு வைத்தது தெரியவந்தது. அந்த அடகு கடையிலும் சந்தானகிருஷ்ணனே மேற்பார்வையாளராக இருந்தார். நகைக்கு அதிக வட்டி கேட்டதாக சந்தானகிருஷ்ணனுக்கும், சுபாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் சுபா தனது இன்ஸ்டாகிராம் நண்பர்கள் மூலம் சந்தானகிருஷ்ணனை காரில் கடத்தி சென்று நகையை பறித்தது தெரியவந்தது. 4 பேர் கைது இதுதொடர்பாக சுபா, அவருடைய நண்பர்களான நெல்லை பாளையங்கோட்டை குலவணிபுரத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் லட்சுமணன்(25), நெல்லை மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த தனமாரியப்பன் மகன் சந்துரு(24), கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் மனோ(23) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/tenkasi-4-people-including-a-young-woman-arrested-for-kidnapping-a-businessman-in-a-car-and-stealing-his-jewelry




