ரூட் எடுத்த பா.ம.க-வினர்!மெளனம் கலைத்த செளமியா. 'தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை' என வெளிப்படையாக அறிவித்துவிட்டார் பா.ம.க தலைவர் அன்புமணி. த.வெ.க கூட்டணியில் வி.சி.க இடம் பெற்றிருப்பதால், பெரும்பாலான பா.ம.க-வினர் அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக பேசிவருவதும் சமூக வலைதளங்களில் எழுதி வருவதோடு, களத்திலும் அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக வேலை செய்திருக்கின்றனர். இந்த விஷயங்களை ஒரு சில முக்கிய நிர்வாகிகள், தலைமையின் கவனத்துக்குப் புகாராக கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆனால், 'இது தொடர்பாக யாரையும் எதுவும் சொல்லவேண்டாம். அவர்கள் விருப்பப்படி விட்டுவிடுங்கள்' என தலைமை சொல்லியிருக்கிறது. இந்தச்சூழலில், 'முதல்வர் விஜய்யின் அமைச்சரவையில், சௌமியா அன்புமணி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆகப்போகிறார்' என்கிற தகவல்கள் வெளியானதும், அ.தி.மு.கவுக்கு ஆதரவாக இருந்தவர்கள் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறார்கள். ஆனால், சௌமியா அன்புமணியே அது வதந்தி என அறிவித்ததும், அ.தி.மு.க ஆதரவு ரூட்டை வேகப்படுத்தி இருக்கிறார்களாம் பா.ம.க-வினர். பரபரக்கும் ஜெம் வீரமணி வழக்கு!எஸ்.ஐ.டி குழுவிலிருந்து விலகல். ஜெம் வீரமணி வழக்கை விசாரிக்க டி.ஜி.பி மகேஷ்குமார் அகர்வால் அமைத்திருக்கும் எஸ்.ஐ.டி-யிலிருந்து விலக விருப்பம் தெரிவித்திருக்கிறார் துணை கமிஷ்னர் கீதாஞ்சலி. இவர், குற்றச்சாட்டுக்குள்ளான ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவரின் தீவிர விசுவாசி எனக் கூறப்படுகிறது. ஜெம் வீரமணி விசாரணை விவரங்கள், சீக்ரெட்கள் எல்லாம் இவர் மூலம் நிச்சயம் அந்த ஐ.பி.எஸ் அதிகாரிக்கு லீக் ஆக வாய்ப்புள்ளதாக மேலிடத்துக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார் இந்த வழக்கை தோண்டியெடுத்த அதிகாரி. அதையடுத்து மேலிட அழுத்தத்தின் பெயரில்தான் கீதாஞ்சலியை விலக வைத்திருக்கிறார்கள். அதேபோல, எஸ்.ஐ.டி குழுவிலிருக்கும் துணை கமிஷனர் முத்தரசியும் குற்றச்சாட்டுக்குள்ளான ஐ.பி.எஸ் அதிகாரிக்கு நெருக்கம் என்பதால், அவரையும் எஸ்.ஐ.டி-யிலிருந்து விலக வைக்கலாமா என யோசிக்கிறதாம் ஆட்சி மேலிடம்! தி.மு.க தலைமை கறார் உத்தரவு!"ஓட்டுக்கு பணம் கொடுக்காதீர்கள்." அக்டோபர் 2-ம் தேதி தாராபுரத்திலும், 3-ம் தேதி மதுராந்தகத்திலும் பிரசாரம் செய்யவிருக்கிறார் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின். 'மதுராந்தகத்தில் வெல்வது கடினம். தாராபுரத்தில் அ.தி.மு.க-வுக்கு செல்வாக்கு இருக்கிறது' என களநிலவரத்தை அவரிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள் தி.மு.க-வினர். உடனடியாக இரண்டு தொகுதிகளிலும் சீனியர் பொறுப்பாளர்களிடம் போனில் பேசிய ஸ்டாலின், 'அங்க என்ன நடக்குது. வெற்றி பெற்றுவிடுவோமா.' என விசாரித்திருக்கிறார். திமுக தலைவர் ஸ்டாலின் அப்போது பேசிய முன்னாள் அமைச்சர்கள் சிலர், 'தலைவரே வேலை நல்லாதான் நடக்குது. இறுதிநாள் பணப் பட்டுவாடா செய்தால்தான் கணிசமாக வாக்குகளைப் பெறமுடியும்' என யோசனை சொல்லியிருக்கிறார்கள். அதற்கு ரியாக்ட் செய்த ஸ்டாலின், 'பணம் கொடுக்காமல் தேர்தலில் வெற்றிபெற வேண்டும். மக்களை சந்தித்து நாம் செய்த சாதனைகளை எடுத்துச் சொல்லுங்கள்' என கறாராக சொல்லிவிட்டாராம். சர்ட்டிபிகேட் கொடுக்கும் மாவட்ட எஸ்.பி!"லஞ்சம் வாங்குபவர்கள் நல்லவர்கள்!" தலைநகருக்கு வடகிழக்கில் அமைந்துள்ள மாவட்டத்தின் எஸ்.பி எந்த வேலையும் செய்வதில்லையாம். அக்கட தேசத்தின் மாநில எல்லையும் இந்த மாவட்டத்தில் வருவதால், போதைப் பொருள் கடத்தலுக்கான ரூட்டாக இருந்து வருகிறது. மேலும் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. அதனால் மாநில எல்லைப்பகுதிகளில் உள்ள போலீஸார், போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் கூட்டு, தொழிற்சாலைகளை மிரட்டி மாமூல் என வசூல் வேட்டையில் திளைக்கிறார்களாம். அதுதொடர்பாக உளவுத்துறை ரிப்போர்ட் கேட்க, 'வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக சொல்லப்படும் போலீஸார் நல்லவர்கள்' என அந்த மாவட்ட எஸ்.பி கூறிவிட்டாராம். இதனால் யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். 'போதைப் பொருள் நடமாட்டத்தை காரணமாக வைத்து அந்த எஸ்.பி-யை தூக்கியடிக்க வேண்டும்' என்ற புகார் ஆட்சி மேலிடம் வரையில் போயிருக்கிறது. கண்டுக்கொள்ளாத அமைச்சர்!ஏன் விழுந்தார் எம்.எல்.ஏ? தாராபுரத்தில் வாக்கு வேட்டையாடுவதற்காக, சைக்கிள் பேரணியை நடத்தினார்கள் சில அமைச்சர்கள். அப்போது, ஒரு சீனியர் அமைச்சரின் காதோடு ரகசியம் பேச வந்த ஒரு எம்.எல்.ஏ., நிலைதடுமாறி சைக்கிளில் இருந்து விழுந்தார். ஆனால், அதைக் கண்டுக்கொள்ளாமல் சைக்கிளை ஓட்டிக்கொண்டுச் சென்றுவிட்டார் சீனியர் அமைச்சர். அவர் காதில் பேச வந்த ரகசியம்தான், இப்போது அமைச்சர்களுக்குள் பேசுபொருளாகி இருக்கிறது. மிஸ்டர் கழுகு: ‘நோ’ கிரீன் சிக்னல். அப்செட்டில் காங்கிரஸ்! அதாவது, தன்னுடைய தொகுதி அடங்கியிருக்கும் மாவட்டத்துக்குள் கனிமவளத்தை எடுத்துக் கொள்ளவும், ஊரகப் பகுதிகளில் சில டெண்டர்களை தனக்குச் சாதகமாக முடித்துக் கொள்ளவும், அந்த சீனியர் அமைச்சரிடம் பேசினாராம் எம்.எல்.ஏ. 'என் கையில எதுவும் இல்லை. எல்லாமே மேலிடம் எடுக்குற முடிவுதான்' என்று தட்டிக் கழித்து வந்திருக்கிறார் அமைச்சர். அப்போதும் விடாத எம்.எல்.ஏ., 'ஒரு தொகுதிக்கு மாவட்டச் செயலாளர் பதவியைக் கொடுத்து ஏமாத்திட்டீங்க. துணைப் பொதுச்செயலாளர் மாதிரி கெளரவ பதவியையும் சேர்த்துக் கொடுங்கண்ணே.' என்று நச்சரித்திருக்கிறார். அப்போதுதான், நிலைதடுமாறி சைக்கிளில் இருந்து விழுந்தாராம் எம்.எல்.ஏ. திரும்பிப் பார்க்காமல், தொல்லைவிட்டது என சிட்டாக சென்றுவிட்டாராம் சீனியர் அமைச்சர். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group. இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும். வணக்கம், BIG BREAKINGS முதல். அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/kazhugar-updates-on-sowmiya-anbumani-and-by-election-update




