டெல்லி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி டெல்லியில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித் தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக் கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கி ழமை) நடக்கிறது. முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பாக பந்து வீசி 156 ரன்களில் ஆப்கானிஸ்தானை கட்டுப்படுத்தியது. இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், ஜஸ்பிரித் புர்மா ஒரு விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர்கள் அக்ஷர் பட்டேல், வருண் சக்ரவர்த்தி தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா இடம் பெறாததால் 5-வது பவுலர் இடத்தை ஈடுசெய்ய ஆல்-ரவுண்டர்கள் ஷிவம் துபே, நிதிஷ் குமார் ரெட்டி, அபிஷேக் ஷர்மா ஆகியோரை பயன்படுத்தியதில் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. 5-வது பவுலர் பிரச்சினைக்கு விரைவில் முடிவு காண வேண்டியது அவசி யமான ஒன்றாகும். இதற்கிடையே, சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ர வர்த்தி மீண்டும் காயத்தில் சிக்கி இருக்கிறார். இதனால் அவர் எஞ்சிய தொடரில் இருந்து விலகி இருக்கிறார். ஆசிய விளையாட்டு போட்டியிலும் அவர் ஆடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா (82 ரன்), இஷான் கிஷன் (42 ரன்) அதிர டியில் அசத்தினர். இதனால் 13.4 ஓவர்களிலேயே இலக்கை எளிதாக எட்டிப்பிடித்தது. தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் 10 ரன்னில் ஆட்டமி ழந்து ஏமாற்றம் அளித்தார். 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு அவர் தொடர்ந்து சொதப்பி வருகிறார். 15 வயது அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி வாய்ப்புக்காக பெஞ்சில் காத்து இருப்பதால் சஞ்சு சாம்சன் சிறப்பாக ஆட வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார். இந்த ஆட்டத்திலும் இந்திய அணியின் அதிரடி தொடரும் எனலாம். கடந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு மெச்சும் வகையில் இல்லை. 7 ஓவர்களில் 43 ரன்னுக்கு 5 விக் கெட்டுகளை இழந்து தடுமாறிய அந்த அணியின் 6-வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பான அஸ்மத்துல்லா ஒமர்ஜாய் (64 ரன்), முகமது நபி (33 ரன்) தவிர மற்றவர்கள் தாக்குப்பிடிக்கவில்லை. அவர்கள் இருவரும் தான் பந்து வீச்சிலும் பயனுள்ள பங்களிப்பை அளித்தனர். இன்றைய ஆட்டம் ஆப்கானிஸ்தான் அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். இதில் தோற்றால் அவர்கள் தொடரை இழந்து விடுவார்கள். எனவே கடந்த ஆட்டத்தில் செய்த தவறுகளை திருத்தி, புதிய வியூகத்துடன் ஆப் கானிஸ்தான் அணியினர் களம் காணுவார்கள். அதேநேரத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தோல்வியை சந்திக்காத இந் திய அணி தங்கள் ஆதிக்கத்தை தொடர்ந்து தொடரை வெல்ல தீவிரம் காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் பரப்பரப்புக்கு பஞ்சம் இருக்காது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/cricket/2nd-t20-match-india-and-afghanistan-clash-today




