‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் கதாநாயகன் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் இயக்குநர் இளன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ‘பியார் பிரேமா காதல்’, ‘ஸ்டார்’ ஆகிய படங்களை இயக்கிய இளன், தற்போது ‘பியார் பிரேமா கல்யாணம்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை அவரே எழுதி, இயக்கியுள்ளார். சான்வீ மேக்னா நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில், மாறன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ‘மேட் இன் கொரியா’வைத் தயாரித்த ‘ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட்’ ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார். திருமணத்துக்குப் பிறகும் பெற்றோர் வீட்டை விட்டுச் செல்ல மறுக்கிறார் நாயகி சான்வீ. அதனால், அவரது கணவரான இளன், மனைவி வீட்டுக்கே குடி பெயர்கிறார். இதன் பின்னர் தொடங்கும் குடும்ப கலாட்டா, கலாச்சார மோதல்கள், உறவு சிக்கல்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்கள் என சிரிப்பும், சிந்தனையும் கலந்த பயணமாக படம் நகர்கிறது. இறுதியில், “சந்தோஷமாக வாழ்வதற்கான விதிகளை மற்றவர்கள் தீர்மானிக்க வேண்டியதில்லை” என்பதை படம் அழகாக எடுத்துரைக்கிறது. ஓடிடி வெளியீடு ‘பியார் பிரேமா கல்யாணம்’ படம் ஆகஸ்ட்21ம் தேதி தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் கதாநாயகன் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/elans-pyaar-prema-kalyanam-films-character-introduction-video-out




