இந்தியப் பிரதமர் மோடியும், இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனியும் நல்ல நண்பர்கள். தற்போது மெலோனி ‘இத்தாலியின் பிரதமராக நீண்ட காலம் பதவி வகிப்பவர்’ என்கிற பெருமையை அடைந்துள்ளார். இதையொட்டி மெலோனிக்குத் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் மோடி. “இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய இத்தாலிய வரலாற்றில், மிக நீண்ட காலம் பிரதமராகப் பணியாற்றிய பெருமையைப் பெற்ற எனது தோழி, பிரதமர் மெலோனிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மோடி, மெலோனி"என்னை பழைய ஆர்டிஸ்ட்; பாக்க முடியாதுனு சொல்லிட்டாரு அவரு" - வையாபுரி எமோஷனல் இந்த மைல்கல், இத்தாலி மக்கள் அவரது தலைமையின் மீது வைத்துள்ள ஆழமான நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. இந்தியா - இத்தாலி இடையிலான சிறப்புமிக்க மூலோபாயக் கூட்டாண்மையை வலுப்படுத்துவதில் அவரது நட்புறவு மிக முக்கியப் பங்காற்றியுள்ளது. நம் இரு நாட்டு மக்களின் வளமான எதிர்காலத்திற்காக அவருடனான இந்த நெருங்கிய கூட்டுப்பணியைத் தொடர்ந்து முன்னெடுக்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். வரவிருக்கும் ஆண்டுகளில் அவர் தொடர்ந்து வெற்றிகளைப் பெற எனது உளம் கனிந்த நல்வாழ்த்துகள்.” 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் இத்தாலி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் மெலோனி. ஆனால், இரண்டாம் உலகப் போருக்குப் பின், இத்தாலியை 1,413 நாட்கள் தொடர்ச்சியாக ஆண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/pm-modi-congratulates-meloni-on-becoming-italy-longest-serving-pm




