தவாங் அருணாசல பிரதேசத்தில் அதிக ஆபத்துள்ள 7 பனி ஏரிகளை அடையாளம் கண்டு, பொதுமக்களிடம் அதுபற்றி அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அருணாசல பிரதேசத்தின் தவாங் மாவட்டத்தில் மகோ பகுதியில் பெரிய அளவில் பனி ஏரி உடைந்து வெள்ளம் ஏற்பட கூடிய சாத்தியங்கள் பற்றி ஆய்வு செய்யப்பட்டன. இதில், 7 அதிக ஆபத்து ஏற்படுத்தும் பனி ஏரிகள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. இது ஏரியின் கரையை ஒட்டி வசிக்க கூடிய மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்த கூடும் என்று தெரிகிறது. ராணுவ முகாம் இதனை முன்னிட்டு, அந்த பகுதியில் உள்ள இந்திய ராணுவ முகாம், தூரி கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் அதிக கவனம் செலுத்தியுள்ளதுடன், மகோ கிராமத்தில் இதற்காக விழிப்புணர்வு பிரசாரம் ஒன்றும் நடத்தப்பட்டு உள்ளது. திடீரென பனி ஏரி உடைந்து விட்டால் ஏற்பட கூடிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு ஏற்ப, அவற்றின் இருப்பிடம், உயரம் மற்றும் தொலைவு ஆகியவை பற்றி குடியிருப்புவாசிகளுக்கு விரிவாக எடுத்து கூறப்பட்டது. நேபாள வெள்ளம் இதில், பாதுகாப்பாக தப்பி செல்லும் வழிகள் மற்றும் வரையறுக்கப்பட்ட பாதுகாப்பான இடங்கள், அதற்கான நடைமுறைகள் மற்றும் மனிதர்களுக்கும், சொத்துகளுக்கும் இடர்களை குறைப்பதற்கான சமூக மட்டத்திலான வெளியேற்ற திட்டங்கள் பற்றியும் அறிவுறுத்தப்பட்டது. இயற்கை பேரிடர்களை கணிக்க முடியாது என்றபோதிலும், அச்சப்படாமல் எச்சரிக்கையுடனும், தயாராகவும் இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர். சமீபத்தில், நேபாளத்தில் பனிப்பாறை உடைந்து ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் பலியானார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/7-high-risk-glacial-lakes-in-arunachal-pradesh-awareness-drive-launched




