சென்னை, ‘மெய்யழகன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு பிரேம் குமார் இயக்கும் படம் என்பதாலும், பகத் பாசில் கதாநாயகனாக நடிப்பதாலும் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பிரேம் குமாருடன் இணைந்த பகத் பாசில் மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் பகத் பாசில், தமிழ் திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில், ‘96’ மற்றும் ‘மெய்யழகன்’ படங்களின் இயக்குனர் பிரேம் குமாரின் இயக்கத்தில் நடித்துள்ளார் இந்த அறிவிப்பு தமிழ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பரில் வெளியாகிறது இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்த திரைப்படத்தின் வெளியீடு குறித்து பகத் பாசில் தற்போது தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், பிரேம் குமார் இயக்கத்தில் தான் நடித்துள்ள அடுத்த தமிழ் திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். சிவதா கதாநாயகி இந்த திரைப்படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடிகை சிவதா நடிக்கிறார். பிரேம் குமாரின் வழக்கமான கூட்டணியில் இடம்பெறும் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைக்கிறார். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே. கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார். எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கூட்டணி ‘மெய்யழகன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு பிரேம் குமார் இயக்கும் படம் என்பதாலும், பகத் பாசில் கதாநாயகனாக நடிப்பதாலும் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் ஆக்ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகி வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளன. டிசம்பர் வெளியீட்டை பகத் பாசில் உறுதி செய்துள்ள நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் டீசர் உள்ளிட்ட அடுத்தடுத்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/fahadh-faasil-with-the-director-of-meiyazhagan-the-film-hits-screens-in-december




