சென்னை, 16 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- சிறுமி தற்கொலை உசிலம்பட்டி அருகே 16 வயது தலித் சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. தனது எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடன் பள்ளிச் சேர்க்கைக்காகச் சென்ற அந்தச் சிறுமி, அங்கு அவமானப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், மனவேதனையில் அச்சிறுமி உயிரை மாய்த்து கொண்டதால், அவரது குடும்பம் நிலை குலைந்து போயுள்ளது. ஒவ்வொரு குழந்தைக்கும் மரியாதையும், கண்ணியமும், பாதுகாப்பான கல்விச்சூழலும் கிடைப்பது அவர்களின் உரிமை. தகுந்த தண்டனை இது போன்ற மனவேதனைக்கு எந்தக் குழந்தையும் தள்ளப்படக் கூடாது. இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை வழங்கி, நீதி நிலைநாட்டப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/suicide-of-16-year-old-girl-near-usilampatti-kanimozhi-mp-expresses-anguish




