அபுதாபி, அபுதாபியில் பள்ளிக்கூடங்கள் நாளை மீண்டும் திறக்கப்படுகிறது. இந்த நிலையில் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைக்கும் மாணவ-மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் அபுதாபி போக்குவரத்து துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இலவச பஸ் பயண அட்டை அதன்படி, நடப்பு கல்வியாண்டில் சிறந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறும் மாணவ-மாணவிகளுக்குப் பொது போக்குவரத்து பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்வதற்கான 'இலவச பஸ் பயண அட்டை' வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மாணவர்கள் மத்தியில் கல்வியை ஊக்குவிக்கவும், அவர்களின் சாதனைகளை கௌரவிக்கவும் இந்த சிறப்பு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அட்டையை பயன்படுத்தி மாணவர்கள் ஆண்டு முழுவதும் இலவசமாக பயணம் செய்யலாம். இந்த சலுகை 2025-2026-ம் கல்வி ஆண்டில் 95 சதவீதத்துக்கும் மேற்பட்ட மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. பெற்றோர்கள் மகிழ்ச்சி போக்குவரத்து துறையின் இந்த மற்றும் வரவேற்கத்தக்க அறிவிப்பு, அங்கு வாழும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்தத் திட்டம் மாணவர்களை மேலும் விறுவிறுப்பாக படிக்கத் தூண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/world/free-bus-travel-for-high-scoring-students-abu-dhabi-department-of-transport-announces




