Doctor Vikatan: எனக்கு கடந்த மாதம் டெங்கு பாதித்தது. ஒரு மாதம் சிகிச்சையில் இருந்து மீண்டு வந்தேன். ஆனாலும் எனக்கு உடல்சோர்வு குறையவே இல்லை. இது இப்படியேதான் தொடருமா. டெங்குவின் தீவிரம் குறைந்துவிட்ட பிறகும் தொடரும் இந்த உடல்சோர்வை எப்படிப் புரிந்துகொள்வது. இதிலிருந்து மீளவே வாய்ப்பில்லையா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் குமாரசாமி தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் குமாரசாமி உங்களுக்கு ஏற்பட்டிருப்பது டெங்கு காய்ச்சலுக்குப் பிந்தைய சோர்வு நோய்க்குறி (Post-Dengue Fatigue Syndrome) என அழைக்கப்படுகிறது. டெங்கு காய்ச்சலிலிருந்து குணமடைந்தவர்களில் சுமார் 15% முதல் 20% பேருக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது. காய்ச்சல் குறைந்த பிறகும் நீண்ட நாள்களுக்குக் கடும் உடல் சோர்வு நீடிக்கும். டெங்கு வைரஸ் தொற்றின் காரணமாக, உடலின் அடிப்படை வளர்சிதை மாற்ற வீதம் (Basal Metabolic Rate - BMR) தற்காலிகமாக அதிகரிப்பதே இந்த அதிகப்படியான சோர்வுக்கு முதன்மைக் காரணமாகும். இது தற்காலிகமான பிரச்னைதான். எனவே, தொடர்கதையாகிவிடுமோ என பயப்படத் தேவையில்லை. டெங்கு பாதிப்பிலிருந்து மீண்ட நோயாளிக்கு போதுமான அளவு தூக்கமும், உடல் மற்றும் மன அளவிலான ஓய்வும் மிக மிக அவசியமாகும். உடலை எப்போதும் நீர்ச்சத்துடன் வைத்துக்கொள்ள அதிகளவு தண்ணீர், இளநீர், பழச்சாறுகள் மற்றும் கஞ்சி போன்ற திரவ உணவுகளைப் பருக வேண்டும். வழக்கமான ரத்தப் பரிசோதனைகள் மூலம் ரத்த அணுக்களின் எண்ணிக்கை, ஹீமோகுளோபின் மற்றும் ரத்தத் தட்டணுக்களின் (Platelets) அளவு சீராக உள்ளதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். Doctor Vikatan: டெங்கு காய்ச்சல். இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் எமர்ஜென்சி சிகிச்சை அவசியம் வழக்கமான ரத்தப் பரிசோதனைகள் மூலம் ரத்த அணுக்களின் எண்ணிக்கை, ஹீமோகுளோபின் மற்றும் ரத்தத் தட்டணுக்களின் (Platelets) அளவு சீராக உள்ளதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். முழுமையாக குணமடையும் வரை உடலை வருத்தும் அல்லது அதிக ஆற்றல் தேவைப்படும் கடினமான வேலைகளைச் செய்யக் கூடாது. இந்தச் சோர்வு நிலையானது காலப்போக்கில் தானாகவே சரியாகிவிடும். இதற்கெனத் தனியாக பெரிய மருத்துவச் சிகிச்சைகள் எதுவும் தேவையில்லை. டாக்டர் குமாரசாமி: சென்னை, விஹெச்எஸ் மருத்துவமனையில் தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவராக இருக்கிறார். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் என்ற பெயரில் வெளியாகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/health/dengue-fatigue-that-continues-even-after-recovery-will-it-get-better-or-will-it-persist-like-this




