சென்னை, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி சென்னையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “த.வெ.க. கூட்டணியில் பா.ம.க. இணைய உள்ளதாக பரவிய தகவலை வதந்தி என்று பா.ம.க. எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணியும், வி.சி.க. தலைவர் திருமாவளவனும் கூறியிருக்கிறார்கள். அதை வதந்தி என்றே நாங்களும் நம்புகிறோம். தமிழக வெற்றிக் கழகத்தைப் பொறுத்தவரை எந்த ஒரு பிரச்சினையிலும் வெளிப்படைத் தன்மையுடன் கருத்துகளை வெளிப்படுத்துவது இல்லை என்ற கொள்கையை கடைபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதே கொள்கையைத் தான் பா.ம.க. விஷயத்திலும் அவர்கள் கடைபிடிக்கிறார்கள்.” இவ்வாறு அவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-trk-government-lacks-transparency-on-any-issue-p-shanmugam




