தான் பணி நிமித்தமாக தற்பொழுது வெளியூரில் இருப்பதால், நேரில் ஆஜராவதற்கு கூடுதல் கால அவகாசம் கேட்டு ராதா தரப்பில் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் 80-களில் பல வெற்றிப் படங்களில் நடித்து குடும்ப ரசிகர்களை கவர்ந்தவர்கள் நடிகை அம்பிகா மற்றும் ராதா சகோதரிகள். இவர்கள் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளனர். தற்போது இருவரும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நிலையில், சொந்த தொழில் தொடர்பான பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.46 கோடி அளவில் காசோலை மோசடி நடைபெற்றதாக தனது சகோதரி நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் குஞ்சன் நாயர் மீது நடிகை ராதா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக புகார்தாரரான நடிகை ராதாவிடம் முதலில் விரிவான வாக்குமூலம் மற்றும் ஆவணங்களைப் பெறுவதற்காக, இன்று நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. கால அவகாசம் கேட்ட நடிகை ராதா இந்நிலையில் விசாரணைக்கு நடிகை ராதா நேரில் இன்று ஆஜராகவில்லை. தான் பணி நிமித்தமாக தற்பொழுது வெளியூரில் இருப்பதால், நேரில் ஆஜராவதற்கு கூடுதல் கால அவகாசம் கேட்டு ராதா தரப்பில் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பிகாவின் விளக்கம் இதனிடையே தங்கையின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நடிகை அம்பிகா, குடும்ப சொத்துப் பிரச்னைகளை தீர்த்துக்கொள்ள நடிகை ராதாவே தங்களுக்கு இந்த காசோலைகளைத் தந்ததாகக் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/cheque-fraud-complaint-against-sister-ambika-actress-radha-fails-to-appear-at-police-commissionerate




