சிவகங்கை, சிவகங்கை மாவட்டத்தில், லால்குடி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. லீமா ரோஸ் மார்ட்டின் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் த.வெ.க. அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது;- “த.வெ.க. ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பிறகு நிறைய திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்கள். லால்குடி தொகுதியில் உள்ள மாமன்னர் ராஜராஜசோழன் கட்டிய 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலை புனரமைக்க வேண்டும் என்று நான் கோரிக்கை விடுத்திருந்தேன். அவர்கள் 1 கோடி அல்லது 2 கோடி ஒதுக்குவார்கள் என்று நினைத்தேன். ஆனால் கோவில்களை புனரமைக்க மொத்தமாக 125 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறார்கள். அதே போல் காவல்துறையினருக்கு சம்பள உயர்வு, காவல்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் முன்வைத்துள்ளோம். எங்கள் கோரிக்கைகளை ஓரளவு நிறைவேற்றிக் கொண்டுதான் வருகிறார்கள். மக்களுக்கு தேவை அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுதான். அந்த வகையில் த.வெ.க. அரசு கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறது. சட்டம்-ஒழுங்கைப் பொறுத்தவரை, கொலைகள் நடப்பதை தடுப்பது கடினம். அதே சமயம் சிங்கப்பூர், துபாய் போன்ற இடங்களில் கடுமையான தண்டனைகளை கொடுக்கிறார்கள். தண்டைகள் கடுமையானால் தான் கொலைக்குற்றங்கள் குறையும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/how-is-the-tvk-government-performing-lalgudi-mla-leema-rose-responds




