புதுடெல்லி, நாடு முழுவதும் கடந்த 2026 ஆகஸ்டு மாதத்திற்கான ஜி.எஸ்.டி. வருவாய் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், கடந்த ஆண்டை விட 14.8 சதவீதம் வளர்ச்சி அடைந்து, மொத்த வசூல் ரூ.1,99,853 கோடியாக பதிவாகி சாதனை படைத்துள்ளது. ஆகஸ்டு மாத ஜி.எஸ்.டி. வசூல் மொத்த ஜி.எஸ்.டி. வசூல்: ரூ.1,99,853 கோடி (14.8% உயர்வு) உள்நாட்டு ஜி.எஸ்.டி.: ரூ.1,37,249 கோடி (9% உயர்வு) இறக்குமதி ஜி.எஸ்.டி.: ரூ.90,925 கோடி (29.2%உயர்வு) திருப்பி வழங்கப்பட்ட தொகை: ரூ.31,795 கோடி நிகர ஜி.எஸ்.டி. வருவாய்: ரூ.1,68,057 கோடி (8.3% உயர்வு) முதலிடத்தில் மராட்டியம் மாநில வாரியான உள்நாட்டு ஜி.எஸ்.டி. வசூலில் மராட்டியம், கர்நாடகா, குஜராத், மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழக்கம் போல் முன்னிலை வகித்து தங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளன. புதுச்சேரியில் சரிவு புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் உள்நாட்டு ஜி.எஸ்.டி. வசூல் ரூ.195 கோடியாக குறைந்துள்ளது. கடந்தாண்டு ஆகஸ்டில் ரூ.225 கோடி வசூலான நிலையில், இந்தாண்டு 13 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. இருப்பினும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஜி.எஸ்.டி. ரூ.49 கோடியாக உயர்ந்துள்ளது. மத்திய அரசிடமிருந்து ஐ.ஜி.எஸ்.டி. பங்கீடு செய்யப்பட்ட பிறகு, புதுச்சேரிக்கு கிடைத்த பிந்தைய எஸ்.ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.141 கோடியாக அதிகரித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/puducheri-august-month-gst-rs-195-crore-collection-lower-than-last-year




