மதுரை, மதுரை அரசரடி மேற்கு கோட்ட மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு மதுரை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை என்ஜினீயர் ரெஜினா ராஜகுமாரி தலைமை தாங்குகிறார். மனு எனவே இக்கோட்டத்திற்கு உட்பட்ட வில்லாபுரம், ஜெய்ஹிந்த்புரம், ஜீவாநகர், டி.வி.எஸ்.நகர், அவனியாபுரம், பசுமலை, பழங்காநத்தம், திருப்பரங்குன்றம், தெற்கு அரசரடி, எஸ்.எஸ்.காலனி, ஞானஒளிவுபுரம், பி.பி.சாவடி, மேற்கு அரசரடி, வடக்கு அரசரடி, விளாங்குடி ஆகிய மின்பிரிவு அலுவலகங்களை சேர்ந்த மின் நுகர்வோர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் மின் சம்பந்தப்பட்ட குறைகளை மேற்பார்வை என்ஜினீயரிடம் நேரிலோ அல்லது மனுக்கள் மூலமாகவோ தெரிவித்து பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/electricity-consumer-grievance-redressal-meeting-in-madurai-tomorrow




