கோழிக்கோடு, கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பேப்பூர் அருகே உள்ள வெஸ்ட் மாகி பகுதியில் இயங்கி வரும் ஒரு தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான எந்திரங்கள் மற்றும் பொருட்கள் எரிந்து சாம்பலாகின. மளமளவென பரவிய தீ வெஸ்ட் மாகி பகுதியில் உள்ள இந்த ஆலையில், தேங்காய் எண்ணெய் உற்பத்திக்காக டன் கணக்கில் கொப்பரை தேங்காய்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. திடீரென ஆலையின் ஒரு பகுதியில் இருந்து கரும்புகை கிளம்பி, அடுத்த சில நிமிடங்களில் தீ ஆலை முழுவதும் மளமளவெனப் பரவி எரிய தொடங்கியது. எளிதில் தீப்பற்றக்கூடிய கொப்பரை தேங்காய்கள் மற்றும் எண்ணெய் இருந்ததால், தீ வானுயர எழும்பி கொழுந்துவிட்டு எரிந்தது. தீயணைப்பு படை போராட்டம் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் கோழிக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஆலைக்குள் புகுந்து, தண்ணீரைப் பீய்ச்சியடித்து பல மணி நேரம் கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பல கோடி சேதம் இந்த பயங்கர தீ விபத்தில் ஆலையில் இருந்த அதிநவீன எண்ணெய் உற்பத்தி எந்திரங்கள், பல டன் கொப்பரை தேங்காய்கள் மற்றும் இருப்பு வைக்கப்பட்டிருந்த தேங்காய் எண்ணெய் முற்றிலும் எரிந்து நாசமாகின. சேத மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. விபத்து நடந்த சமயத்தில் ஊழியர்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/major-fire-at-coconut-oil-mill-in-kozhikode




