தேனி, தேனி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானார். இதையடுத்து அவரது பெற்றோர் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். இந்த நிலையில் தேனி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் அந்த சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றதாக தெரிய வந்தது. சிறுமியை அந்த சிறுவன் திண்டுக்கல்லுக்கு அழைத்து சென்றதும், அங்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. சிறுமி இருக்கும் இடத்தை போலீசார் தேடிச் சென்ற நிலையில், அந்த சிறுவன் அங்கிருந்து தப்பி சென்று விட்டான். இதையடுத்து சிறுமியை போலீசார் மீட்டனர். விசாரணையில், இந்த சம்பவத்துக்கு சிறுவனின் பெற்றோர் உடந்தையாக இருந்ததாக தெரிய வந்தது. அதன்பேரில், சிறுவனின் தாய், தந்தை ஆகிய இருவரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தப்பியோடிய சிறுவனை தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/boy-rapes-girl-on-pretense-of-love-parents-who-were-accomplices-arrested




