தென்காசி, திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், தென்காசி மாவட்டம், கடையநல்லூர் துணை மின் நிலையத்தில் உள்ள பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இது தொடர்பாக கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பக விநாயக சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடையநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட கடையநல்லூர் துணை மின் நிலைய பகுதிகளில் நாளை (8.8.2026, சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின் வினியோகம் தடை செய்யப்படும். அதன்படி கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம், பேட்டை, மாவடிக்கால், குமந்தாபுரம், முத்துச்சாமிபுரம், வலசை, கருப்பாநதி, தார்க்காடு, போகநல்லூர், கண்மணியாபுரம், பாலஅருணாச்சலபுரம், கம்பனேரி, மங்களபுரம், அச்சம்பட்டி, பொய்கை, ஊர் மேல் அழகியான், வேலாயுதபுரம், இடைகால், சிவராம்பேட்டை, கொடிக்குறிச்சி மற்றும் நயினாரகரம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-tomorrow-10




