வாஷிங்டன், அமெரிக்காவின் அட்லாண்டாவில் நடைபெற்ற 'சுற்று 16' (Round of 16) நாக்-அவுட் போட்டியில், ஆரம்பம் முதலே எகிப்து அதிரடி காட்டியது. 15-வது நிமிடத்தில் யாசர் இப்ராஹிம் முதல் கோலை அடித்து எகிப்தை முன்னிலை பெற செய்தார். தொடர்ந்து 67-வது நிமிடத்தில் முஸ்தபா ஜிகோ மேலும் ஒரு கோல் அடிக்க, அர்ஜெண்டினா 0-2 என்ற பின்னடைவை சந்தித்தது. இருப்பினும் இறுதிக்கட்டத்தில் அர்ஜெண்டினா அபாரமாக விளையாடியது. 79-வது நிமிடத்தில் மெஸ்சியின் உதவியுடன் கிறிஸ்டியன் ரொமேரோ கோல் அடித்து கணக்கை தொடங்கினார். அதன் பின்னர் 84-வது நிமிடத்தில் மெஸ்ஸியே ஒரு கோல் அடித்து ஆட்டத்தை 2-2 என சமன் செய்தார். கூடுதல் நேரத்தின் 90+2-வது நிமிடத்தில் என்சோ பெர்னாண்டஸ் வெற்றிக்கான கோலை அடிக்க, அர்ஜெண்டினா 3-2 என்ற கோல் கணக்கில் திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அர்ஜென்டினா காலிறுதிக்கு முன்னேறியது. உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினாவுக்கு எதிரான ஆட்டத்தில் 79 நிமிடங்கள் வரை 2-0 என முன்னிலை வகித்த எகிப்து. கடைசி 11 நிமிடங்களில் அடுத்தடுத்து 3 கோல்கள் வாங்கி தோல்வி அடைந்தது. இதில் 58-வது நிமி டத்தில் எகிப்து வீரர் மோஸ்தபா ஜிகோ அடித்த கோல் நிராகரிப்பு, பெனால்டி வாய்ப்பு மறுப்பு என நடுவரின் ஒருதலைபட் சமான பல தீர்ப்புகள் எகிப்தின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி வாய்ப்பை பறித்து விட்டதாக எகிப்து பயிற்சியாளர் ஹஸ்சாம் ஹசன் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா மற்றும் மெஸ்சி தொடர்ந்து விளையாட வேண்டும் என்பதற்காக நடுவர்கள் இவ்வாறு நடந்திருக் கலாம் என்றும் கூறினார். இந்த நிலையில் 'பிபா' நடுவர்கள் குழு தலைவர் பியர்லூகி கோலினா இது குறித்து விளக்கம் அளித்து வெளியிட்ட அறிக்கையில், 'அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு இங்கு இட மில்லை. உலகக் கோப்பை நடுவர்களின் நேர்மையை யாரும் கேள்விக்குள்ளாக்க முடியாது. அவ்வாறு செய்தால் அது அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல்களை உருவாக்கும் வகையிலான எதிர்வினைகளை தூண்டக்கூடும். இது சரியானது அல்ல. மோஸ் தபா ஜிகோ கோல் அடிப்பதற்கு முன்பாக எகிப்து வீரர் அட்டியா, அர்ஜென்டினா வீரர் மார்ட்டி னசின் காலில் மிதித்தது தெளிவாக தெரிந்தது. எனவே அது 'பவுல்' தான். களத்தில் நடுவர் இதை பார்க்கவில்லை என்றால் வி.ஏ.ஆர். தொழில்நுட்பம் தலையிடலாம்'. என நடுவர்கள் குழு குறிப்பிட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/football/நடுவர்-அர்ஜென்டினாவுக்கு-சாதகமாக-செயல்பட்டாரா-பிபா-மறுப்பு




