நெல்லை, 10 நாட்களுக்கு பிறகு பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். 10 நாட்கள் தடைக்கு பிறகு அனுமதி பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் கடந்த 12-ந்தேதி ஆடி அமாவாசை திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழா மற்றும் இதன் முன்னேற்பாடு பணிகள், தூய்மைப் பணிகள் உள்ளிட்ட காரணங்களால் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு கீழே மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள பிரசித்தி பெற்ற அகஸ்தியர் அருவிக்கு கடந்த 7-ந் தேதியில் இருந்து நேற்று முன்தினம் வரையிலும் 10 நாட்கள் பொதுமக்கள் செல்ல வனத்துறையினர் தடைவி தித்து இருந்தனர். தொடர்ந்து நேற்று முதல் வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அகஸ்தியர் அருவிக்கு செல்ல வனத்துறையினர் அனுமதி வழங்கினர். சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் இதன் காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் காலை யில் இருந்தே குடும்பத்துடன் வந்து அருவியில் குளித்து சென்றனர். இதேபோல் கடந்த இரு தினங்களாக சொரிமுத்து அய்யனார் கோவில் தூய்மைப் பணிகள் காரணமாக பாபநாசம் வனச்சோதனை சாவடியும் மூடப்பட்டு இருந்த நிலையில் நேற்று முதல் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கும் பக்தர்கள் வழக்கம் போல் அனுமதிக்கப்பட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/permission-granted-after-10-days-tourists-enjoy-an-enthusiastic-dip-at-agasthiyar-falls




