திருமலை, அலிபிரி நடைபாதையில் புகைப்பிடித்த நபர் மீது திருப்பதி தேவஸ்தானம் போலீசில் புகார். இது தொடர்பாக, திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- போலீசில் புகார் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் திருமலையிலோ, அலிபிரி நடைபாதையிலோ புகைப்பிடிக்க கூடாது என்பது தேவஸ்தானத்தின் விதியாகும். விதிமுறைகளுக்கு மாறாக ஒருவர் அலிபிரி நடைபாதை யில் புகைப்பிடித்து வருவதாக தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பந்தப்பட்ட நபர் மீது திருமலை 2-டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட உள்ளது. தடை விதிமுறைகள் படி திருமலை, அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு மற்றும் தேவஸ்தா னத்துக்கு சொந்தமான பிற பகுதிகளில் மதுபானம் குடித்தல், புகைப்பிடித் தல், போதைப்பொருட்களை பயன்படுத்துதல், அசைவ உணவுகளை சாப்பி டுதல் ஆகியவை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஒழுங்கு நடவடிக்கை இந்த விதிமுறைகள் தெரிந்திருந்தும், பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் அலிபிரி நடைபாதையில் புகைப்பிடித்தது கண்டிக்கத்தக்க செயலாகும். தேவஸ்தான விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சோதனைகளில் அலட்சியமாக செயல்படும் பாதுகாப்பு பணியாளர்கள் மீதும் உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/man-smoking-on-alipiri-footpath-ttd-files-police-complaint




