சென்னை, சென்னையில் பானி பூரி கடைக்காரரை கட்டையால் தாக்கிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். பானி பூரி கடைக்காரரை கட்டையால் தாக்கிய பெண் சென்னை தியாகராயநகர் டாக்டர் தாமஸ் சாலையில் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த அபினேஷ் (வயது 25) என்பவர் பானி பூரி கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டின் அருகே வசிக்கும் நிஷாந்தி(33) என்பவர் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றதாக தெரிகிறது. இதை அபினேஷ் கண்டித்துள்ளார். அப்போது அவரை நிஷாந்தி கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். கைது; மதுபாட்டில்கள் பறிமுதல் இதில் அபினேஷ் காயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நிஷாந்தியை கைது செய்தனர். நிஷாந்தி வீட்டில் இருந்து 9 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 27 குற்ற வழக்குகள் விசாரணையில் கைது செய்யப்பட்ட நிஷாந்தி பரங்கிமலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது ஏற்கனவே சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்தது தொடர்பாக 15 வழக்குகள், கஞ்சா, திருட்டு, அடிதடி என மொத்தம் 27 குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-woman-arrested-for-attacking-pani-puri-shop-owner-with-stick




