சென்னை ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்க பொதுக்கூட்ட குழுவில் கூடுதல் உறுப்பினர்கள் நியமனத்தை மாணிக்கம் தாகூர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- பொதுக்கூட்டம் பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு 'லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்" என்ற ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கம் தொடர்பான பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. செங்கம் ஜி.குமார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், எம்.பி. ஒப்புதலுடன், வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரத்தில் 15.07.2026 அன்று "லஞ்சம் தவிர் -நெஞ்சம் நிமிர்" என்ற ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கம் தொடர்பான பொதுக்கூட்டத்தை ஒருங்கிணைக்க ஏற்கனவே குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக செங்கம் ஜி.குமார் செயல்படுவார். இக்குழுவில் கீழ்க்கண்ட உறுப்பினர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். 1. பி.எஸ். விஜயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ 2. கே. குணசேகரன், தலைவர், திருவண்ணாமலை தெற்கு 3. எஸ். பிரசாத், முன்னாள் தலைவர், திருவண்ணாமலை வடக்கு 4. அண்ணாமலை, முன்னாள் தலைவர், திருவண்ணாமலை வடக்கு 5. நாராயணமூர்த்தி, முன்னாள் தலைவர், கிருஷ்ணகிரி கிழக்கு 6. ஜேசுதுரை, முன்னாள் தலைவர், கிருஷ்ணகிரி கிழக்கு 7. வி.ஆர். கிருஷ்ணகுமார், மாநில செயலாளர் 8. சாய் கே.வெங்கடேசன், மாநில செயலாளர் 9. தக்கோலம் ஜம்புலிங்கம், மாநில செயலாளர் 10. எஸ் சசிகுமார், பஞ்சாயத்து ராஜ் சங்கதன் முன்னாள் மாநில தலைவர் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/appointment-of-additional-members-to-the-public-meeting-committee-of-the-peoples-movement-against-corruption-manickam-tagore-announces




