இந்திய நடிகர்களின் சொத்து விபரங்கள் பற்றிய விபரம் வெளியாகி இருக்கிறது. ஹுருன் இந்தியா நிறுவனம் இதனை வெளியிட்டுள்ளது. இதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இந்திய அளவில் மிகப்பெரிய பணக்கார நடிகராக அறிவிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், அவர் ஒரு வருடத்தில் அவரது நிகர சொத்து மதிப்பில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது ஒரு வருடத்தில் ஷாருக்கானின் நிகர சொத்து மதிப்பு ரூ.2490 கோடி குறைந்துள்ளது. ஷாருக்கானின் தற்போதைய நிகர சொத்து மதிப்பு ரூ.10,000 கோடியாகும். கடந்த ஆண்டு ஷாருக்கானின் சொத்து மதிப்பு ரூ.12,490 கோடியாக இருந்தது. ஆனால் தற்போது ரூ.12,490 கோடியில் இருந்து ரூ.10,000 கோடியாகக் குறைந்துள்ளது. அமிதாப்பச்சன், சல்மான் கான் அவரது நிகர மதிப்பில் பெரும் சரிவு இருந்தபோதிலும், இந்தியாவின் பணக்கார நடிகர்களின் பட்டியலில் தனது முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. ஷாருக்கானின் சொத்து அவர் திரைப்படங்களில் இருந்து சம்பாதிப்பது மட்டும் அல்லாது, ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், நைட் ரைடர்ஸ் ஸ்போர்ட்ஸ் மூலமும் சம்பாதித்து வருகிறார். இப்பட்டியலில் அமிதாப் பச்சன், சல்மான் கான், ஹிருத்திக் ரோஷன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். அமிதாப்பச்சனுக்கு ரூ.4,000 கோடியும், நடிகர் சல்மான் கானுக்கு ரூ.3000 கோடியும், ஹிருத்திக் ரோஷனுக்கு ரூ.2500 கோடியும் சொத்து இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு பட்டியலில் இடம் பெற்று இருந்த ஷாருக்கானின் தொழில் பார்ட்னர் ஜூஹி சாவ்லா மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோர் பெயர் பட்டியலில் இடம் பெறவில்லை. பெண் மேலாளரின் துப்பட்டாவில் முகத்தைத் துடைத்த ஷாருக்கான்; என்ன சொல்கிறார்கள் நெட்டிசன்கள்? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://cinema.vikatan.com/bollywood/loss-of-2490-crore-in-assets-shah-rukh-khan-retains-status-as-wealthy-actor




