டோக்கியோ, ஜப்பானுக்கு எதிரான டி20 போட்டியில் இந்தியா திரில் வெற்றி பெற்றது. இந்தியா - ஜப்பான் ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் ஒரேஒரு சர்வதேச டி20 போட்டியில் இன்று விளையாடியது. ஜப்பானின் டொஷிகி மாகாணத்தில் உள்ள சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. மழை காரணமாக இப்போட்டி 5 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்தியா 32 ரன்கள் அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்தியா 5 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்தது. இந்தியாவின் தொடக்க வீரர்கள் சஞ்சு சாம்சன் 9 ரன்னிலும், அபிஷேக் சர்மா (0) ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆகினர். இஷான் கிஷன் 3 ரன்னிலும், கேப்டன் ஷ்ரேயாஸ் 16 ரன்னிலும் அவுட் ஆகினர். திலக் வர்மா 1 ரன்னிலும், ஷிவம் துபே ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். ஜப்பான் தரப்பில் சார்லி 2 விக்கெட்டுகளையும், இப்ராகிம், பெஞ்சமின் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 30 ரன்களில் சுருண்ட ஜப்பான் இதையடுத்து 5 ஓவர்களில் 33 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜப்பான் அணி, 5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 30 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய பந்துவீச்சில் யஷ் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/cricket/t20-india-secures-thrilling-victory-over-japan




