வாஷிங்டன், மார்வெல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் திரைப்படம் 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’. ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் இவான்ஸ், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், பெட்ரோ பாஸ்கல் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். ரஸ்ஸோ சகோதரர்கள் இயக்கியுள்ள இப்படம் டிசம்பர் 18, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் ‘டாக்டர் டூம்’ கதாபாத்திரத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே ‘அயர்ன் மேன்’, அதாவது ‘டோனி ஸ்டார்க்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ஆவார். சுமார் 10 ஆண்டுகள் ரசிகர்களை மகிழ்வித்த இந்த கதாபாத்திரத்தின் கதை, 2019-ம் ஆண்டு வெளியான ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ திரைப்படத்தோடு முடிவு பெற்றுவிட்டது. இருப்பினும் ராபர்ட் டவுனி ஜூனியர் ஏற்று நடித்த அந்த கதாபாத்திரத்திரத்திற்கு ரசிகர்களின் மனதில் இன்று வரை தனி இடம் உள்ளது. ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படத்திற்குப் பிறகு அடுத்தடுத்து பல புதிய சூப்பர் ஹீரோக்கள் மார்வெல் யூனிவர்ஸ் திரைப்படங்களில் அறிமுகம் செய்யப்பட்டனர். குறிப்பாக ‘அயர்ன் மேன்’ கதாபாத்திரத்தின் அம்சங்களை கொண்ட ‘அயர்ன் ஹார்ட்’ என்ற பெண் கதாபாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அந்த கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த சூழலில்தான் நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியர் ‘டாக்டர் டூம்’ கதாபாத்திரம் மூலம் மீண்டும் மார்வெல் யூனிவர்சில் அடியெடுத்து வைத்துள்ளார். இதுவரை மார்வெல் யூனிவர்ஸ் படங்களில் வந்த வில்லன்களை விட ‘டாக்டர் டூம்’ மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று கூறப்படுகிறது. அவரை ‘அவெஞ்சர்ஸ்’ அணி எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது? என்பதைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியரிடம் சமீபத்தில் ஒரு பேட்டியின்போது, ‘அயர்ன் மேன், டாக்டர் டூம் ஆகிய இருவரில் உங்களுக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் எது? என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “தற்போதைக்கு எனக்கு பிடித்த கதாபாத்திரம் ‘டாக்டர் டூம்' என்று சொல்வேன். இவ்வளவு காலமும் நான் எதை இழந்து கொண்டிருந்தேன் என்பதை இப்போது என்னால் தெளிவாக பார்க்க முடிகிறது. டூம்ஸ்டே படத்தில் வரும் திருப்பங்கள் சுவாரஸ்யமாகவும், எதிர்பாராத விதமாகவும் இருக்கும்” என்று தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/iron-man-doctor-doom-which-character-do-you-prefer-actor-robert-downey-jrs-reply




