கொழும்பு, 2011 உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் அடைந்த தோல்வி மற்றும் எம்.எஸ். தோனி குறித்த தனது நினைவுகளை, இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகர பகிர்ந்துள்ளார். தோனி ஒருமுறைகூட பேசவில்லை உலகக்கோப்பை தொடருக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியுடன் இணைந்து விளையாடிய அனுபவத்தை நினைவுகூர்ந்த அவர், "சிஎஸ்கே அணியில் தோனியுடன் விளையாடியபோது, 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டி குறித்து அவர் ஒருமுறைகூட என்னிடம் பேசவில்லை. அதுவே அவர் எப்படிப்பட்ட மனிதர் என்பதை காட்டுகிறது. அவர் மிகவும் அமைதியானவர். எப்போதும் நிகழ்காலத்தில் மட்டுமே கவனம் செலுத்துவார். கடந்த காலத்தைப் பற்றி சிந்திக்காமல், அடுத்த போட்டியில் வெற்றி பெறுவதையே இலக்காகக் கொண்டிருப்பார்" என்று தெரிவித்துள்ளார். 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு வெற்றியை தேடித்தந்த சிக்ஸரை தோனி அடித்தபோது, அந்த பந்தை வீசியவர் இலங்கை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகர என்பது குறிப்பிடத்தக்கது. தோனியை அவுட் செய்ய முயன்றேன் மேலும் பேசிய அவர், "பவர்ப்ளே மற்றும் கடைசி ஓவர்களில் எந்த பந்துவீச்சாளருக்கும் இதுபோன்ற சூழல் ஏற்படலாம். நான் தோனியை அவுட் செய்ய முயன்றேன். ஆனால், அவர் சிக்ஸர் அடித்து போட்டியை முடித்தார். இருப்பினும், 2014 டி20 உலகக்கோப்பையை நாங்கள் வென்றது, 2011 தோல்வியின் வேதனைக்கு ஓரளவு ஆறுதலாக அமைந்தது" என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/cricket/ex-sri-lanka-star-who-lost-in-2011-world-cup-final-shares-stunning-story-about-ms-dhoni




