சென்னை, முதல்தர கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாற்றை ஆட்சி செய்த டாப் 5 ஜாம்பவான்களை தற்போது பார்ப்போம். எண்ணற்ற சாதனை கிரிக்கெட் விளையாட்டில் பேட்ஸ்மேன்கள் அடிக்கும் ரன்களே பெரும்பாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. ஆனால், ஒரு அணியின் வெற்றிக்கு அடித்தளமாக இருப்பவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். துல்லியமான லைன், லென்த் மற்றும் சுழற்பந்து வீச்சின் மூலம் பேட்ஸ்மேன்களை திணறடித்து, முதல்தர கிரிக்கெட்டில் எண்ணற்ற சாதனைகளை படைத்த 5 தலைசிறந்த பந்துவீச்சாளர்களை பார்க்கலாம். வில்ப்ரெட் ரோட்ஸ் 1898 முதல் 1930 வரை 32 ஆண்டுகள் நீண்ட கிரிக்கெட் வாழ்க்கையை கொண்ட வில்ப்ரெட் ரோட்ஸ், முதல்தர கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரராக இன்றும் முதலிடத்தில் உள்ளார். 1,110 போட்டிகளில் விளையாடிய அவர், 4,204 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஏ.பி. ப்ரீமேன் 1914 முதல் 1936 வரை விளையாடிய ஏ.பி. ப்ரீமேன், 592 போட்டிகளில் 3,776 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை 53 ரன்களுக்கு வீழ்த்திய (10/53) அவரது சாதனை, போட்டியின் போக்கையே மாற்றக்கூடிய பந்துவீச்சாளராக அவரை உயர்த்தியது. சி.டபிள்யூ.எல். பார்க்கர் 1903 முதல் 1935 வரை முதல்வரிசை கிரிக்கெட்டில் விளையாடிய சி.டபிள்யூ.எல். பார்க்கர், தனது சுழற்பந்து வீச்சால் பேட்ஸ்மேன்களை சிக்கவைத்தார். 635 போட்டிகளில் 3,278 விக்கெட்டுகளை கைப்பற்றிய அவர், ஒரு இன்னிங்ஸில் 10/79 என்ற சிறந்த பந்துவீச்சையும் பதிவு செய்துள்ளார். ஜே.டி. ஹியர்ன் 1888 முதல் 1923 வரை விளையாடிய ஜே.டி. ஹியர்ன், 639 போட்டிகளில் 3,061 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 9/32 என்ற சிறந்த பந்துவீச்சை பதிவு செய்துள்ளார். டி.டபிள்யூ.ஜே. காடார்ட் 1922 முதல் 1952 வரை முதல்வரிசை கிரிக்கெட்டில் விளையாடிய டி.டபிள்யூ.ஜே. காடார்ட், 593 போட்டிகளில் 2,979 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஒரு இன்னிங்ஸில் 10/113 என்ற சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். பந்துவீச்சாளர்களின் பொற்காலம் இன்றைய கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தாலும், முதல்தர கிரிக்கெட்டின் வரலாற்றில் இந்த ஐந்து ஜாம்பவான் பந்துவீச்சாளர்கள் படைத்த சாதனைகள் காலத்தால் அழியாதவை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/cricket/cricket-legends-10-wickets-in-a-single-innings-the-record-of-these-five-spinners-is-impossible-to-break




