பாட்னா, ஜமுய் சம்பவத்தின் பரபரப்பு இதுவரை தணியாத சூழலில், தற்போது பீகாரில் அதே போல் மற்றொரு சம்பவம் அரங்கேறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் கடந்த சில நாட்களுக்கு முன்பு பீகார் மாநிலத்தின் ஜமுய் மாவட்டத்தில், ஒரு சிறுமியும் அவரது ஆண் நண்பரான மைனர் சிறுவனும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவர்களிடம் ஒரு கும்பல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறியது. அது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கலாசார காவலர்கள் அதிலும், குறிப்பிட்ட ஒரு மதத்தை சேர்ந்த அமைப்பினர் சிலர், பொது இடங்களில் ஜோடியாக செல்பவர்களை மிரட்டும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக பலர் குற்றம்சாட்டினர். சம்பந்தப்பட்ட வீடியோ காட்சியிலும் அத்தகைய அமைப்பை சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் தங்களை கலாசார காவலர்கள்(Moral Police) என்று அழைத்துக் கொள்கின்றனர். இருப்பினும் பெண்கள் மற்றும் கலாசாரத்தை காப்பதாக கூறிக்கொண்டு, மைனர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என கண்டனக் குரல்கள் எழுந்த நிலையில், பீகார் போலீசார் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, மைனர் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 3 பேரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மீண்டும் ஒரு சம்பவம் அந்த சம்பவத்தின் பரபரப்பு இதுவரை தணியாத சூழலில், தற்போது பீகாரில் இதே போல் மற்றொரு சம்பவம் அரங்கேறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. அந்த வீடியோவில் மைனர் சிறுமியிடம் இளைஞர்கள் சிலர் அத்துமீறலில் ஈடுபடும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த சம்பவம் பீகாரில் கர்பூரிகிராம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஜகத்சிங்பூர் கிராமம் அருகே நடந்துள்ளது. அடுத்தடுத்து பீகாரில் நடைபெறும் இத்தகைய சம்பவங்கள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது போலீசார் நடவடிக்கை எடுத்து, மைனர் சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட 4 இளைஞர்களை கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/uproar-in-bihar-again-youths-harass-minor-girl-in-broad-daylight-video-goes-viral




