கடந்த 2024ம் ஆண்டு அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.டி வளாகத்தில் அக்ஷித் பூக்யா என்ற இரண்டாம் ஆண்டு மாணவர் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஐ.ஐ.டி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றின் ஒருக்கிணைப்பாளராக பூக்யா செயல்பட்டார். அதில் ஐ.ஐ.டியின் லோகோ அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. இது தொடர்பாக பூக்யாவிற்குத் தொடர்ந்து ஐ.ஐ.டி நிர்வாகம் நெருக்கடி கொடுத்துக்கொண்டே இருந்தது. எனவே அந்த நெருக்கடி காரணமாக அதே ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி தனது விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தத் தற்கொலை குறித்து இதுவரை வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள ஹனம்கொண்டாவில் வசிக்கும் சமூகவியல் ஆசிரியரும், பூக்யாவின் தந்தையுமான ஹேமந்த் பூக்யா தனது மகன் நினைவாக அவரிம் சொந்த ஊரில் கோயில் ஒன்றைக் கட்டி இருக்கிறார். தற்கொலை இது குறித்து ஹேமந்த் அளித்த பேட்டியில், ''கொரானா தொற்றுநோய் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட லாக்டவுன் காலத்தில் மக்கள் தங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ என் மகன் ஆலோசனை வழங்கினான். அவர் தற்கொலை செய்து கொண்டால், அவர் மீது மிகப்பெரிய அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். போலீஸ் விசாரணையில் பல்வேறு தடைகள் இருப்பதால், அக்ஷித்தின் மரண வழக்கில் இதுவரை எஃப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை. இதற்காக இறுதிவரை போராட முடிவு செய்துள்ளேன். எனது மகன் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளில் மாநில அளவில் முதலிடம் பெற்றவர். மனவலிமையான ஆளுமை கொண்டவர். அவரது நம்பிக்கைகள் மங்கி வருவதால், அவரது நினைவாக அக்ஷித்தை உயிருடன் வைத்திருக்க முடிவு செய்து எங்களது சொந்த கிராமமான சந்தியா தாண்டாவில் ஒரு கோயிலைக் கட்ட முடிவு செய்தேன். நான் எட்டு மாதங்களுக்கு முன்பு இந்தக் கோவிலைக் கட்டினேன், ஒவ்வொரு நாளும் என் மகனைச் சந்திக்க வருகிறேன். என் நினைவிலும், இன்னும் அதிர்ச்சியில் இருக்கும் என் குடும்ப உறுப்பினர்களுக்காகவும், குறிப்பாகச் சிகிச்சையிலிருக்கும் என் மனைவிக்காகவும் நான் இதைக் கட்டினேன். இது எங்களுக்குத் தொடர்ந்து செல்வதற்கு வலிமை அளிக்கிறது. இந்த வழக்கில் இதுவரை நீதி கிடைக்கவில்லை. நீதிமன்றத்தில் புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட நபர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை'' என்று குற்றம் சாட்டினார். மகனுக்காக கோயில் கட்டிய தந்தை ஹேமந்தின் குடும்பத்தினர் தவறாமல் கோயிலுக்குச் செல்கிறார்கள். அங்கு அக்ஷித்தின் புகைப்படம் அவர்கள் இழந்த மகனின் நினைவூட்டலாக உள்ளது. அக்ஷித் போபாலில் உள்ள மௌலானா ஆசாத் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் கணினி அறிவியலில் பிடெக் பட்டதாரி ஆவார். 2023 இல் ஐஐஎம்ஏவில் சேருவதற்கு முன்பு ஹைதராபாத்தில் ஒரு வருடத்திற்கும் மேலாக மென்பொருள் எஞ்சினியராகப் பணியாற்றினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/crime/i-did-this-to-keep-my-son-alive-father-builds-a-temple-for-son-who-died-by-suicide-at-iit




