மும்பையில் தற்போது விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. மும்பையில் உள்ள விநாயகர்களில் லால்பாக் ராஜா மிகவும் பிரபலம் ஆகும். இந்த விநாயகரைத் தரிசிக்க பாலிவுட் பிரபலங்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் வந்து செல்கின்றனர். பொதுமக்கள் இந்த விநாயகரைத் தரிசிக்க பல மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர். லால்பாக் ராஜாவைத் தரிசிக்க பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது மனைவி கெளரி, மகள் சுஹானா, பெண் மேலாளர் பூஜா ஆகியோருடன் வந்திருந்தார். கணவன் மனைவி இருவரும் லால்பாக் ராஜாவிற்கு ஆரத்தி எடுத்து தரிசனம் செய்தனர். அவர் குடும்பத்தோடு விநாயகரைத் தரிசித்த காணொலி சமூக ஊடகங்களில் வைரலானது. அவ்வாறு வைரலான ஒரு காணொலி அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. லால்பாக் ராஜாவைத் தரிசித்தபோது ஷாருக்கான் கண்ணில் ஏதோ விழுந்துவிட்டது. குடும்பத்துடன் ஷாருக்கான் உடனே கௌரியும் சுஹானாவும் அருகில் நின்று கொண்டிருந்தபோது, மேலாளர் பூஜாவின் துப்பட்டாவை இழுத்து ஷாருக்கான் தனது முகத்தைத் துடைத்துக்கொண்டார். இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தனது மனைவி அல்லது மகள் அருகில் இருக்கும் போது அவர்களின் துப்பட்டாவை ஷாருக்கான் ஏன் பயன்படுத்தவில்லை என்று பல சமூக ஊடக பயனர்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் ஷாருக்கானின் ரசிகர்கள் இந்தச் செயலை நியாயப்படுத்தியுள்ளனர். பூஜா தத்லானியுடன் அவருக்கு நெருக்கமான மற்றும் நீண்டகால தொழில்முறை உறவு இருப்பதைச் சுட்டிக்காட்டினர். குடும்பத்துடன் ஷாருக்கான் பல ரசிகர்கள் இந்தச் சம்பவம் வெறுமனே தன்னிச்சையானது என்றும் அதனை மிகைப்படுத்தக்கூடாது என்றும் தெரிவித்துள்ளனர். ஷாருக்கான் தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் கிங் படத்தில் நடித்து வருகிறார். ஷாருக்கான் மகள் சுஹானா கான், தீபிகா படுகோன், அபய் வர்மா, ராகவ் ஜூயல், ராணி முகர்ஜி, அபிஷேக் பச்சன், அர்ஷத் வார்சி மற்றும் அனில் கபூர் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். "இறந்தாலும் எங்களுடன்தான் இருக்கவேண்டும்" - புதைத்த நாயை நள்ளிரவில் தோண்டி எடுத்து வந்த ஷாருக்கான் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://cinema.vikatan.com/bollywood/shah-rukh-khan-wiped-face-with-his-female-managers-dupatta-goes-viral




