விஜய் சேதுபதி அண்ணாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை என ‘பத்தா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியுடன் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. கதாநாயகன் மட்டுமின்றி வில்லன், குணச்சித்திரம் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து இந்திய அளவில் கவனம் பெற்றுள்ளார். பாலாஜி தரணிதரனுடன் மீண்டும் கூட்டணி ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சீதக்காதி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதி - இயக்குநர் பாலாஜி தரணிதரன் கூட்டணியில் உருவாகி வரும் மூன்றாவது திரைப்படம் ‘பத்தா’. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லிஜோமோல் ஜோஸ் நடிக்கிறார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். அட்லீ தயாரிப்பில் உருவாகும் படம் இப்படத்தை இயக்குநர் அட்லீயின் ‘ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ்’ நிறுவனமும், ‘ஸ்டார் ஸ்டுடியோஸ் 18 - சினி1 ஸ்டுடியோஸ்’ நிறுவனங்களும் இணைந்து தயாரித்து வருகின்றன. விஜய் சேதுபதி - பாலாஜி தரணிதரன் கூட்டணி, அட்லீயின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் சாய் அபயங்கரின் இசை என பல்வேறு காரணங்களால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிகரித்துள்ளது. இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 1ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாய் குரலில் பர்ஸ்ட் சிங்கிள் ‘பத்தா’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘மகளே’ என்ற பாடல் வெளியாகி கவனத்தை பெற்றது. சாய் அபயங்கர் இசையமைத்து பாடிய இந்த பாடல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. டீசரில் கவனம் ஈர்த்த விஜய் சேதுபதியின் தோற்றம் ‘பத்தா’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில், விஜய் சேதுபதியின் தோற்றமும் அவரது கதாபாத்திரமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. 1980-களில் நடக்கும் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தின் போஸ்டர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது இசை வெளியீட்டு விழா இந்நிலையில், ‘பத்தா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு பேசினார். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பேசுகையில், “ரொம்ப நாளுக்குப் பிறகு எல்லாரையும் பார்க்கிறேன். ‘கருப்பு’ படத்துக்குப் பிறகு, ‘ரதிமா’ போன்ற பாடலுக்குப் பிறகு மீண்டும் ‘பத்தா’ மூலம் உங்களை சந்திப்பது எனக்கு மிகப்பெரிய வாய்ப்பாகவும், அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாகவும் உணர்கிறேன். ‘பத்தா’ உருவாக அட்லீ அண்ணாதான் ஆரம்பப் புள்ளி. அவருடன் கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாகப் பயணித்து வருகிறேன். இந்தப் படத்துக்காக என்னை முதன்முதலில் அவரிடம் அழைத்துச் சென்றது என்னுடைய வழிகாட்டிகள் சந்தோஷ் அண்ணா, மகேஷ் அண்ணா. அப்போது பாலாஜி தரணீதரன் சார் இயக்கத்தில் ஒரு படம் செய்ய முடியுமா என்று அண்ணா கேட்டார். நான் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, அதைவிட ‘சீதக்காதி’ படத்தின் மிகப்பெரிய ரசிகன். அதனால் இந்தப் படத்தின் கதையை இசை மூலம் இன்னும் சிறப்பாக்கலாம் என்ற எண்ணத்தில் உடனே உற்சாகமடைந்தேன். இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்காக அட்லீ அண்ணாவுக்கு என்றென்றும் நன்றியுடன் இருப்பேன். அவருடன் பணியாற்றுவது மிகவும் எளிதாக இருந்தது. என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதையும் மிகத் தெளிவாகச் சொல்வார். இந்தப் படத்தின் இசை அமர்வுகள் எனக்கு மிகவும் சிறப்பான அனுபவம். பிடித்திருந்தால் அப்படியே பாராட்டுவார்; பிடிக்கவில்லை என்றால் வேறு முயற்சி செய்யலாம் என்பார். அந்த நேர்மையான அணுகுமுறை என்னை இன்னும் சிறப்பாக வேலை செய்ய வைத்தது. விஜய் சேதுபதி அண்ணாவின் மிகப்பெரிய ரசிகன் நான். அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. இந்தப் படத்தின் மூலம் அந்த வாய்ப்பு கிடைத்தது எனக்கு கடவுளின் ஆசீர்வாதம் போல இருக்கிறது. சேது அண்ணா, இந்த வாய்ப்புக்கு மிக்க நன்றி. உங்களை மிகவும் நேசிக்கிறேன். ‘பத்தா’ ஒரு நீண்ட காலம் நினைவில் நிற்கும் படமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருந்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/i-am-a-huge-fan-of-vijay-sethupathi-music-composer-sai-abhayanka




