புதுடெல்லி, உயிரைப் பணயம் வைத்து பணியாற்றியதற்காக 301 வீரர்களுக்கு வீரதீரப் பதக்கங்களும், மிகச் சிறந்த பணிக்காக 92 பேருக்கு ஜனாதிபதியின் சிறப்பு சேவை பதக்கங்களும் வழங்கப்பட உள்ளன. 1,057 பணியாளர்கள் சுதந்திர தினம் 2026-ஐ முன்னிட்டு, காவல்துறை, தீயணைப்புப் பணி, ஊர்க்காவல் படை (Home Guard), சிவில் பாதுகாப்பு மற்றும் சிறைச்சாலைத் துறை ஆகியவற்றைச் சேர்ந்த மொத்தம் 1,057 பணியாளர்களுக்கு வீரதீரச் செயல் மற்றும் சேவைக்கான பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. துணிச்சல், சிறப்பான சேவை பல்வேறு பாதுகாப்பு மற்றும் பொதுப் பாதுகாப்பு அமைப்புகளில் பணியாற்றும் பணியாளர்களின் அசாதாரணமான துணிச்சல், சிறப்பான சேவை மற்றும் கடமையாற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் இந்தப் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. அங்கீகரிக்கப்பட்டவர்களில், சத்தீஸ்கர் மற்றும் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த மூன்று காவல்துறை பணியாளர்களுக்கு வீரதீரச் செயல்கள் பதக்கங்கள் அவர்களின் மறைவுக்கு பின் வழங்கப்பட்டுள்ளன. மறைவுக்குப் பின் கௌரவிக்கப்பட்ட அந்த மூன்று பணியாளர்கள், சத்தீஸ்கர் காவல்துறை கான்ஸ்டபிள்கள் நிதேஷ் எக்கா மற்றும் ரமேஷ் கோரேட்டி, மற்றும் உத்தரப் பிரதேச காவல்துறை ஆய்வாளர் சுனில் குமார் ஆவர். தமிழ்நாட்டை சேர்ந்த 23 பேர் அறிவிக்கப்பட்ட 1,057 விருதுகளில், உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றியதற்காக 301 வீரர்களுக்கு வீரதீரப் பதக்கங்களும், மிகச் சிறந்த பணிக்காக 92 பேருக்குக் ஜனாதிபதியின் சிறப்பு சேவைப் பதக்கங்களும் வழங்கப்பட உள்ளன. 664 பேருக்கு தகுதிக்கான சேவைப் பதக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 பேர் விருது பெறவுள்ளனர். 3 போலீஸ் அதிகாரிகள் தமிழகத்தைச் சேர்ந்த 3 போலீஸ் அதிகாரிகளுக்கு சிறந்த சேவைக்கான ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பதக்கம் பெறும் போலீஸ் அதிகாரிகள்: 1) ஜெ.விஜய் ஆனந்த் – கூடுதல் எஸ்.பி. 2) கே. ராமச்சந்திரன் - கூடுதல் எஸ்.பி. 3) எஸ். குமார் – உதவி கமாண்டண்ட் துணிச்சலுக்கான அங்கீகாரம் இந்த சுதந்திர தின கௌரவங்கள், இந்தியாவின் உள் பாதுகாப்பு, அவசரகால மீட்புப் பணிகள், குடிமைப் பாதுகாப்பு மற்றும் சீர்திருத்தத் துறைகளில் பணியாற்றும் பணியாளர்களின் பங்களிப்பை எடுத்துக்காட்டுகின்றன. மோதல் பாதிப்புக்குள்ளான மற்றும் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் சவாலான கடமைகளை மேற்கொள்பவர்களின் துணிச்சலையும் இந்த அங்கீகாரம் போற்றுகிறது. 80வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு முன்னதாக வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, விதிவிலக்கான வீரத்தை வெளிப்படுத்திய பணியாளர்களுக்கும், அத்துடன் பொதுப் பாதுகாப்பையும் தேசியப் பாதுகாப்பையும் வலுப்படுத்திய தங்களின் தொடர்ச்சியான தொழில்முறை மற்றும் அர்ப்பணிப்புக்காக நன்றி செலுத்தும் விதமாக அமைந்துள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல்துறை மற்றும் பாதுகாப்பு படையை சேர்ந்த 1,057 பேருக்கு பதக்கங்களை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்குகிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/independence-day-2026-1057-police-fire-and-civil-defence-personnel-receive-gallantry-and-service-medals




