புதுடெல்லி, 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய விமானி ஸ்மித்தை நினைத்து இந்தியாவே பெருமைப்படுகிறது என விமான போக்குவரத்து துறை மந்திரி கூறியுள்ளார். துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி புறப்பட்ட எப்.இசட்.1073 என்ற எண் கொண்ட பிளைதுபாய் விமானம் சென்றபோது நடுவானில் விமானிகள் இடையே கடும் சண்டை நடந்தது. ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானி திடீரென எழுந்து, கேப்டனாக இருந்த இந்திய விமானி ஸ்மித் மச்சாரை கத்தியால் குத்தி கடுமையாக தாக்கினார். எனினும், கத்திக்குத்து காயங்களுடன் இருந்தபோதும், துணிச்சலாக போராடிய மச்சார், விமானியின் கதவை திறந்து விட்டார். உடனே உள்ளே வந்த சக பயணிகள், பணியாளர்கள் சக விமானியை தடுத்து, கயிற்றை கொண்டு கட்டிப்போட்டனர். இதனால், விமானத்தை தகர்க்கும் சதி முறியடிக்கப்பட்டது. 174 பயணிகள் உயிர்தப்பினர். அந்த விமானத்தின் கேப்டனாக பணியாற்றிய ஸ்மித் மச்சார் இந்திய நாட்டை சேர்ந்தவர். மும்பை நகரின் கத்கோபர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் ஆவார். துபாயில் வேலைக்காக வசித்து வருகிறார். ஆபத்தான நிலையிலும், ரத்த காயத்துடன் போராடி 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றியதற்காக உலகளவில் தற்பொழுது பாராட்டப்பட்டு வருகிறார். இந்தநிலையில், விமானி ஸ்மித்தை நினைத்து இந்தியாவே பெருமைப்படுகிறது - விமான போக்குவரத்து துறை மந்திரி ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "நன்றிக்கடன் பட்டுள்ளோம்." பல உயிர்களைக் காப்பாற்றிய கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம் ஸ்மித்தை நினைத்து இந்தியாவே பெருமைப்படுகிறது; அவருக்கு அரசு துணை நிற்கும்; உயிருக்கு ஆபத்து இருந்தாலும் 100க்கும் மேலானோரை காப்பாற்றியுள்ளார். இதுதான் இந்தியாவின் அடையாளம் என பதிவிட்டுள்ளார். உடல்நிலை குறித்து அறிய முழு முயற்சி ப்ளை துபாய் விமானத்தில் கத்தியால் குத்தப்பட்ட இந்திய விமானி ஸ்மித் மச்சார் சவுதி அரேபியாவில் தபுக் என்ற ஊரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அவரது உடல் நிலை சீராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் உடல் நிலை குறித்த முழு விவரத்தை அறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/india-is-proud-of-pilot-smith-civil-aviation-minister




