சென்னை, சுதந்திரப் போராட்ட வீரரும், சுதேசி இயக்கத்தின் முன்னோடியுமான 'கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளையொட்டி, முதல்-அமைச்சர் விஜய் அவருக்கு புகழ் வணக்கம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தன்னிகரற்ற வீரத்துடனும், தியாக உணர்வுடனும் போராடி, மக்கள் மனங்களில் சுதேசி உணர்வை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாளில், அவருக்கு எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன். புதிய எழுச்சி ஆங்கிலேயரிடமிருந்து அரசியல் விடுதலை மட்டுமின்றி, பொருளாதார விடுதலையும் அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில், சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி, இந்தியர்களின் தன்னம்பிக்கைக்கும், தற்சார்பு உணர்விற்கும் புதிய எழுச்சியை ஏற்படுத்தியதோடு, உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தையும் முன்னெடுத்தவர் வ.உ.சிதம்பரனார் அவர்கள். தாய்நாட்டின் விடுதலை, சுதேசி உணர்வு, உழைப்பாளர்களின் உரிமை ஆகியவற்றிற்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்த “செக்கிழுத்த செம்மல்”வ.உ.சிதம்பரனாரின் வீரத்தையும், தேசப்பற்றையும், தியாகத்தையும் இந்நாளில் நினைவுகூர்ந்து போற்றுவோம்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-pay-tribute-to-the-sacrifice-of-the-tamil-sailor-vo-chidambaranar-chief-minister-vijay




