ராமேசுவரம், படகில் பதுக்கி வைத்த ரூ.200 கோடி உயர்ரக போதைப்பொ ருட்களை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர். மூடைகளில் போதைப்பொருட்கள் ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி வழியாக இலங்கைக்கு தொடர்ந்து பீடி இலை, கஞ்சா,ஏலக்காய், மஞ்சள், போதைப் பொருட்கள் உள்பட பல பொருட்கள் கடத்தி செல்லப்படுகின்றன. இந்தநிலையில் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் குசு மந்துறை மாதகல் கடற்கரை பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு பிளாஸ்டிக் படகை இலங்கை கடற்படையினர் சோதனை செய்தனர். அதில் இருந்த 3 சாக்கு மூடைகளை கைப்பற்றி பிரித்து பார்த்தனர். அவற்றில் 35 கிலோ ஹெராயின் போதைப்பொருளும், 45 கிலோ மெத்த பெட்டமைன் போதைப்பொருளும் இருந்தன. இதுகுறித்து இலங்கையை சேர்ந்த ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த படகும் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.200 கோடி பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் மற்றும் மெத்தபெட்டமைன் என்பது உயர்ரக போதைப்பொருட்கள் என்பதால் அவற்றின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.200 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த போதைப்பொருட்கள் தமிழக கடற்கரையில் இருந்து கடத்தி செல்லப்பட்டதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடக்கிறது. தமிழக உளவுப்பிரிவு போலீசாரும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/high-grade-narcotics-worth-200-crore-seized-from-a-boat-one-person-arrested




