காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு விரைவாக அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய நீர்வள ஆணையத் தலைவர் அனுபம் பிரசாத்தை, கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சாலுவராய சாமி நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பா.ம.க தலைவர் அன்புமணி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகம் மேலும், மேலும் முன்னேறி வரும் நிலையில், தமிழக அரசு தொடர்ந்து அமைதி காப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் விஜய் மேகதாது அணை கட்டப்படவுள்ள இடத்தை மத்திய நீர்வள ஆணையத்தின் குழு உடனடியாக நேரில் ஆய்வு செய்ய வேண்டும்; ஆய்வுப் பணிகள் விரைந்து முடிக்கப்படுவதற்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சாலுவராய சாமி, மத்திய நீர்வள ஆணையத் தலைவர் அனுபம் பிரசாத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். மேகதாது அணை தொடர்பாக மத்திய நீர்வள ஆணையம் கோரும் கூடுதல் தொழில்நுட்பத் தகவல்களை உடனுக்குடன் வழங்கவும் கர்நாடக அரசு தயாராக இருக்கிறது என்றும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார். இதன் மூலம் மேகதாது அணை கட்டும் முயற்சிகளில் கர்நாடக அரசு மேலும் ஒரு படி முன்னேறியுள்ளது. மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை கடந்த 2019-ம் ஆண்டில் மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு தாக்கல் செய்தது. அந்த அறிக்கையின் சில அம்சங்கள் காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் கூறுகளுக்கு எதிராக இருப்பதால், அதை திருத்தி வழங்கும்படி கடந்த ஜூன் 29-ம் தேதி மத்திய நீர்வள ஆணையம் திருப்பி அனுப்பியது. அடுத்த 50 நாள்களுக்குள், அதாவது ஆகஸ்ட் 19-ம் தேதிக்கு முன்பாக திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு தாக்கல் செய்து விட்டது. மேகதாது அடுத்த 10 நாள்களில், அதாவது ஆகஸ்ட் 29-ம் தேதி மைசூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அவர்கள், மேகதாது அணை கட்டும் பணிகளை விரைவுபடுத்தும் நோக்குடன் அணைக்கு அனுமதி கோரி மத்திய நீர்வள ஆணையத்தை கர்நாடகம் அணுகும் என்று கூறியிருந்தார். அடுத்த நான்காம் நாளில் கர்நாடக அமைச்சர் மத்திய நீர்வள ஆணையத் தலைவரை சந்தித்து புதிய அணைக்கு விரைவாக அனுமதி தர வேண்டும் என்று கோரியிருக்கிறார். மேகதாது அணையை கட்டுவதில் கர்நாடகம் காட்டும் தீவிரத்தை இது உணர்த்துகிறது. அதே நேரத்தில், மேகதாது அணை தொடர்பாக கர்நாடக அரசு ஒவ்வொரு அடியை எடுத்து வைக்கும் போதும், அதை சுட்டிக்காட்டி, கர்நாட அரசின் முயற்சிகளை முறியடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வலியுறுத்தி வருகிறேன். கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், `மேகதாது அணையை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வரும் நிலையில், தமிழ்நாடு அமைதியாக இருப்பது நல்லதல்ல. முதல்வர் விஜய் தமிழக அரசின் அலட்சியம் காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை தாரைவார்ப்பதாக அமைந்துவிடும். எனவே, மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். இது குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும்’' என்று வலியுறுத்தியிருந்தேன். ஆனால், தமிழக அரசு அதன் அலட்சிய அணுகுமுறையை மாற்றிக்கொள்ளவில்லை. மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டுக்கு பாசனத் தேவை, குடிநீர்த் தேவை உள்ளிட்டவற்றில் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும், கர்நாடகத்தில் சுற்றுச்சூழலுக்கும், வன உயிரினங்களுக்கும் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து இதுவரை 100 முறைகளுக்கு மேல் விளக்கிக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளேன். அதன் பயனாக, மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகி விடும் என்பதையும், சென்னை உள்பட 28 மாவட்டங்களில் உள்ள 5 கோடி மக்களுக்கு குடிநீர் கிடைக்காது என்பதையும் தமிழக ஆட்சியாளர்கள் நன்கு அறிந்திருப்பார்கள். டி.கே.சிவக்குமார் இவ்வளவுக்கும் பிறகும் மேகாதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் நகர்வுகளை கண்டும் காணததைப் போல தமிழக அரசு அமைதி காப்பதன் காரணத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. இது என்ன வகையான அரசியல் உத்தி என்பதும் எங்களுக்குத் தெரியவில்லை. மேகதாது அணை கட்ட விரைவாக அனுமதி அளிக்க வேண்டும் என்று கர்நாடக அரசின் சார்பில் மத்திய நீர்வள ஆணையத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில், மேகதாது அணை கட்டப்படுவது உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு எதிரானது என்பதால், அதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று மத்திய நீர்வள ஆணையத்தை வலியுறுத்த வேண்டியது தமிழ்நாடு அரசின் அடிப்படையானக் கடமை ஆகும். அந்தக் கடமையை தமிழ்நாடு அரசு எப்போது நிறைவேற்றி, காவிரியை பாதுகாக்கப் போகிறது? அரசியலாக இருந்தாலும், நிர்வாகமாக இருந்தாலும், மாநில உரிமைகளை பாதுகாப்பதாக இருந்தாலும் விழித்துக் கொண்டவர்கள் தான் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அலட்சியமாக இருந்தவர்கள் உரிமைகளை இழந்திருக்கிறார்கள். 1970-ம் ஆண்டுகளில் கர்நாடகத்தில் காவிரி துணை ஆறுகளின் குறுக்கே கபினி, ஹாரங்கி, ஹேமாவதி, சுவர்ணவதி ஆகிய 4 அணைகள் கட்டப்பட்டது தான் இதற்கு சான்றாகும். அந்த அணைகளால் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை இன்று வரை நம்மால் சரி செய்ய முடியவில்லை. இத்தகைய சூழலில் இன்னும் ஒரு அணை கட்டப்பட்டால் காவிரி பாசன மாவட்டங்களின் நிலை என்னவாகும்? அன்புமணி ராமதாஸ் தமிழக அரசிடம் மீண்டும், மீண்டும் வலியுறுத்துவதெல்லாம் காவிரி விவகாரத்தில் கடைபிடித்து வரும் அலட்சியமான அணுகுமுறையை உடனடியாக கைவிடுங்கள் என்பது தான். மத்திய நீர்வள ஆணையர், மத்திய நீர்வள அமைச்சர், பிரதமர் ஆகியோரை தமிழக முதலமைச்சர் அவர்கள் நேரில் சந்தித்து மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி தரக் கூடாது; அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்ய 2018&ஆம் ஆண்டில் அளிக்கப்பட்ட அனுமதியை திரும்பப் பெறும்படி வலியுறுத்த வேண்டும். அவ்வாறு செய்யும் போது மேகதாது அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடத்தும் போது இதை சுட்டிக் காட்டி வாதிட முடியும் என்பதால் உடனடியாக இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார். "மேகதாது அணை தமிழகத்திற்கே உதவும்; உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் காப்பாற்றுவேன்" - கர்நாடக முதல்வர் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/anbumani-has-criticized-the-tamil-nadu-government-for-being-negligent-regarding-the-mekedatu-issue


