சென்னை, சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பூஜா ஹெக்டேவிடம், தன்னைப் பற்றி வெளியாகும் வதந்திகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், சில நேரங்களில் அந்த வதந்திகள் கோபத்தை ஏற்படுத்தினாலும், இறுதியில் தனக்கு சிரிப்புதான் வருகிறது என்று கூறினார். பான் இந்திய நடிகை பூஜா ஹெக்டே இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. மிஷ்கின் இயக்கிய 'முகமூடி' படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே தற்போது பான் இந்திய நடிகையாக மாறியுள்ளார். கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான 'ஜனநாயகன்' படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக, துல்கர் சல்மானுடன் இணைந்து 'ஸ்ரீ ஸ்ரீ' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. சிரிப்புதான் வருகிறது தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் இவர், அவ்வப்போது தனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான வதந்திகளிலும் சிக்கி வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பூஜா ஹெக்டேவிடம், தன்னைப் பற்றி வெளியாகும் வதந்திகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், சில நேரங்களில் அந்த வதந்திகள் கோபத்தை ஏற்படுத்தினாலும், இறுதியில் தனக்கு சிரிப்புதான் வருகிறது என்று கூறினார். கடந்து செல்வதுதான் நல்லது இதுகுறித்து அவர் பேசும்போது, “என்னைப் பற்றிய சில வதந்திகளைப் பார்க்கும்போது கோபம் வருகிறது. ஆனால் அதைவிட சிரிப்புதான் அதிகமாக வருகிறது. எனக்கே தெரியாத சில விஷயங்கள் மற்றவர்களுக்கு எப்படி தெரிகிறது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. சில நேரங்களில் நம்மைப் பற்றி வெளியாகும் தகவல்களைப் பார்க்கும்போது, இது எங்கிருந்து வந்தது என்றே புரியாது. அதுபோன்ற விஷயங்களை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கடந்து செல்வதுதான் நல்லது” என்று தெரிவித்துள்ளார். பூஜா ஹெக்டேவின் இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/thinking-about-the-rumors-makes-me-laugh-rather-than-angry-pooja-hegde




