சென்னை, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு, வேளாங்கண்ணி-வாஸ்கோடகாமா இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:- * வாஸ்கோடகாமாவில் இருந்து வருகிற 27, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் இரவு 9.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.07361), புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் அதிகாலை 3.45 மணிக்கு வேளாங்கண்ணி வந்தடையும். மறுமார்க்கமாக, வேளாங்கண்ணியில் இருந்து வருகிற 29, செப்டம்பர் 3 ஆகிய தேதிகளில் இரவு 11.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07362), புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் அதிகாலை 3 மணிக்கு வாஸ்கோடகாமா சென்றடையும். * வாஸ்கோடகாமாவில் இருந்து வருகிற செப்டம்பர் 6-ந்தேதி இரவு 9.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07365), புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் அதிகாலை 3.45 மணிக்கு வேளாங்கண்ணி வந்தடையும். மறுமார்க்கமாக, வேளாங்கண்ணியில் இருந்து வருகிற செப்டம்பர் 9-ந்தேதி அதிகாலை 1 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07366), புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் அதிகாலை 3 மணிக்கு வாஸ்கோடகாமா சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதேபோல, உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 8,15,22 ஆகிய தேதிகளில் காலை 10.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (04171), காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக் கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் மதியம் 1.15 மணிக்கு நெல்லை வந்தடையும். மறுமார்க்கமாக, நெல்லையில் இருந்து இன்று (3-ந்தேதி), 10,17,24 ஆகிய தேதிகளில் இரவு 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (04172), மேற்கண்ட வழித்தடம் வழியாக புறப்பட்டதில் இருந்து 4-வது நாள் அதிகாலை 3.30 மணிக்கு பிரயாக்ராஜ் ரெயில் நிலையம் சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-velankanni-and-vasco-da-gama




