புதுச்சேரியில் மங்கலம், தட்டாஞ்சாவடி என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் ரங்கசாமி, தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதனால் தற்போது இடைத்தேர்தலைச் சந்திக்கிறது அந்தத் தொகுதி. முதல்வர் ரங்கசாமி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டத் தலைவர்கள் தொகுதிக்குள் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். உப்பளம் தொகுதியின் எம்.எல்.ஏவும், தற்காலிக சபாநாயகருமான அன்பழகன் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். ஆனால், `சபாநாயகர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது அரசமைப்புச் சட்டங்களுக்கு எதிரானது' என்று அவரை கடுமையாக விமர்சித்து வருகிறது காங்கிரஸ் கட்சி. புதுச்சேரி அதிமுக மாநில செயலாலர் அன்பழகன் எம்.எல்.ஏ இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தற்காலிக சபாநாயகர் அன்பழகன், ``சபாநாயகர் அல்லது துணை சபாநாயகர் தங்கள் வேட்பாளருக்கோ அல்லது கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளருக்கோ தேர்தல் பிரசாரம் செய்வதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் தடை விதிக்கவில்லை. அதே நேரத்தில் தன்னுடைய அதிகாரபூர்வ அரசு வாகனம், அரசு ஊழியர்கள், அரசு அலுவலகம் மற்றும் அரசு இயந்திரத்தை தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் இந்திய அரசியலமைப்பு வகுத்திருக்கும் சட்டம். ஆனால் இந்திய அரசமைப்புச் சட்ட விதிகளை மீறி தற்காலிக சபாநாயகராக இருக்கும் நான் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதாகவும், அதனால் என் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் கூறுகிறார் முன்னாள் முதல்வர் நாராயணசாமி. இந்திய அரசமைப்புச் சட்டத்தை நான் மீறியிருப்பதாக அவர் நிரூபித்தால், என்னுடைய தற்காலிக சபாநாயகர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன். அப்படி இல்லையென்றால் நாராயணசாமி அவர்கள் அரசியலை விட்டு விலகத் தயாரா? சட்டப்பேரவையில் வாக்குரிமை இல்லாத நியமன எம்.எல்.ஏக்களுக்கு வாக்கு செலுத்தும் அதிகாரத்தைப் பெற்றுக் கொடுத்து, தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் உரிமையைப் பறித்தவர்தான் இந்த நாராயணசாமி. தற்போது தட்டாஞ்சாவடியில் நடைபெறும் இடைத்தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் இல்லை. அதனால் எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரங்களை நம்பாமல், மக்கள் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்" என்றார். நாராயணசாமி | புதுச்சேரி காங்கிரஸ் அப்போது, `அ.தி.மு.கவும், த.வெ.கவும் ஒன்றுதான் என்று தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியிருக்கிறாரே…?' என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ``தமிழக முதலமைச்சர் விஜய் பண்பையும், மாண்பையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அ.தி.மு.கவும், த.வெ.கவும் ஒன்று என்றால் உங்கள் கட்சியை கலைத்து விடுங்களேன். கலைத்துவிட்டு, விசில் சின்னத்துக்குப் பதில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட வேண்டும்" என்றார். "தமிழ்நாட்டில் மட்டுமல்ல, புதுச்சேரியிலும் குழப்பம்தான்" - திமுக, காங்கிரஸை அட்டாக் செய்த விஜய் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/puducherry-admk-attacks-by-speech-as-if-admk-and-tvk-are-one-and-the-same-disband-tvk




