டெல்லியில் நடக்க உள்ள உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை சிந்து தனது முதல் சுற்றில் அயர்லாந்து வீராங்கனையுடன் மோதுகிறார். உலக பேட்மிண்டன் 30-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 17-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை டெல்லியில் உள்ள இந்திராகாந்தி ஸ்டேடியத்தில் நடக்கிறது. கவுரவமிக்க இந்த போட்டி இந்தியாவில் நடப்பது 2009-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். உலகின் அனைத்து முன்னணி வீரர், வீராங்கனைகளும் கால்பதிப்பதால் கடும் சவால் நிறைந்த போட்டி யாக இது இருக்கப்போகிறது. இதில் யார்-யாருடன் மோதுவது என்பது குலுக்கல் மூலம் நேற்று முடிவு செய்யப்பட்டது. இதன்படி பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றில் உலக தரவரிசையில் 9-வது இடம் வகிக்கும் இந்தியாவின் பி.வி.சிந்து, 141-ம் நிலை வீராங்கனை சோபியா நோபிளை (அயர்லாந்து) சந்திக்கிறார். உலக பேட்மிண்டனில் சிந்து இதுவரை 5 பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதில் 2019-ம் ஆண்டில் தங்கம் வென்றதும் அடங்கும். இந்த முறை சொந்த மண்ணில் ஆடுவதால் மீண்டும் பதக்கம் வெல்வாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நம்பர் ஒன் வீராங்கனையும், ஒலிம்பிக் சாம்பியனுமான தென்கொரியாவின் அன்சே யங் முதல் ரவுண்டில் பல்கேரியாவின் கலோயானா நல்பன்டோவாவுடன் மோதுகிறார். கணிப்புபடி எல்லாம் சரியாக நகர்ந்தால் அரைஇறுதியில் சிந்து, அன்சே யங்கை சந்திக்க வேண்டி இருக்கும். மற்றொரு இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா, தெட் ஹிதர் துஜாருடன் (மியான்மர்) களம் காணுகிறார். லக்ஷயா சென்- ஆயுஷ் அதே நேரத்தில் ஆண்கள் ஒற்றையரில் இந்திய இளம் வீரர் ஆயுஷ் ஷெட்டிக்கு முதல் ரவுண்டே கடினமாக அமைந்துள்ளது. அவர் நம்பர் ஒன் வீரரும், நடப்பு சாம்பியனுமான சீனாவின் ஷியுகியுடன் மல்லுகட்டுகிறார். உலக பேட்மிண்டனில் பதக்கம் வென்றவரான இந்தியாவின் லக்ஷயா சென், முதல் சுற்றில் ஆஸ்திரியாவின் காலின்ஸ் வாலென்டின் பிலி மோனுடன் மோத உள்ளார். இரட்டையரில் 'பை' சலுகை பெற்றுள்ள இந் தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி நேரடி யாக 2-வது சுற்றில் ஆடுகிறது. பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் திரிஷா ஜாலி- காயத்ரி கோபிசந்த் ஜோடி, ஸ்பெயினின் பாலா லோப்ஸ், லூசியா ரோட்ரிக்ஸ் கூட்டணியை எதிர்கொள்கிறது. நிகழ்ச்சியில் இந்திய பேட்மிண்டன் சங்க செயலாளர் சஞ்சய் மிஸ்ரா பேசுகையில், 'உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்காக அரங்கத்தை முழுமையாக மறுவடிவமைப்பு செய்யவும், மேம்படுத்தவும் சுமார் ரூ.20 கோடி செலவிடப்பட்டுள்ளது' என்றார். பயிற்சியாளர் நம்பிக்கை இந்திய பேட்மிண்டன் அணியின் தலைமை பயிற்சியாளர் கோபிசந்த் கூறு கையில், “பேட்மிண்டனில் ஒரு நாடாக இந்தியா பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. பதக்கம் வெல்லும் திறன் கொண்ட பல வீரர்கள் நம்மிடம் உள் ளனர். பல முன்னணி வீரர்களின் வருகையால் இந்த போட்டி கடும் சவாலாக இருக்கும் என்றாலும், உள்ளுர் சூழல் மற்றும் ரசிகர்களின் ஆதரவு டன் இந்திய வீரர்கள் நிச்சயம் சிறப்பாக செயல்படுவார்கள். ஒற்றையர் மற்றும் இரட்டையர் இரண்டிலும் நமக்கு பதக்கம் வெல்ல வாய்ப்பிருப்பதாக நம்புகிறேன். பி.வி.சிந்து சமீபத்தில் ஜப்பான் ஓபனில் மகுடம் சூடி னார். உன்னதி ஹூடா சாதகமான போட்டி அட்டவணையை பெற்றுள் ளார். காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள சாத்விக் மற்றும் சிராஜ் நல்ல பார்மில் உள்ளனர். லக்ஷயா சென்னுக்குரிய சுற்று கடினமானது. அவர் 3-வது ரவுண்டில் முன்னாள் உலக சாம்பியன் குன்லாவுத் விதித்சரணை (தாய்லாந்து) எதிர்கொள்வதற்கான சாத்தியம் உள்ளது. ஆனால் லக்ஷயா சென் முன் னணி வீரர்களுக்கு எதிராக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதே போல் ஆயுஷ் ஷெட்டி கவனிக்கத்தக்க வீரர்களில் ஒருவராக இருப் பார். மொத்தத்தில் இந்திய பேட்மிண்டனின் எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் இருக்கிறேன்” என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/othersports/world-badminton-championships-pv-sindhu-to-face-ireland-player




