திருவள்ளூர், வீட்டிற்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வீடு புகுந்து ரகளை திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ச.ரெபெக்கா. இவரது கணவர் பிரேம் ஜான். இவர் சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரை பராமரிப்பதற்காக உமா ராணி என்ற பெண் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார். திடீரென, பிரேம் ஜான் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ரெபெக்காவுக்குச் சொந்தமான வீட்டை உமா ராணி போலியான ஆவணங்களை தயாரித்து சட்டவிரோதமாக அபகரிக்க முயன்றுள்ளார். இது குறித்து ரெபெக்கா ஆவடி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில், உமா ராணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ரெபெக்காவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். மேலும், உருட்டுக்கட்டைகளுடன் மிரட்டல் விடுத்து, வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் வெளியில் இருந்த சிசிடிவி கேமராவையும் அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்த மற்றொரு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. விசாரணை இதையடுத்து, ரெபெக்கா அளித்த புகாரின் பேரில் ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படும் உமா ராணியை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-arrested-for-breaking-into-house-and-causing-a-disturbance




