நடிகர் மோகன்லால், தன்னுடைய அடுத்த 7 புதிய திரைப்படங்களை மொத்தமாக அறிவித்து ரசிகர்களுக்குச் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள அவர், 'ஆர்வம் தரும் கதைகள், சுவாரஸ்யமான பயணங்கள் மற்றும் சில சிறப்புமிக்க இயக்குநர்கள்' எனக் குறிப்பிட்டு அந்த 7 இயக்குநர்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளார். மோகன்லால் இயக்குநர்கள் விஷ்ணு மோகன், அனூப் சத்யன், பிரியதர்ஷன், திலீஷ் போத்தன், சத்யன் அந்திக்காடு, ஜூட் அந்தனி ஜோசப், ஜீத்து ஜோசப் ஆகியோரின் இயக்கத்தில் அடுத்தடுத்து நடிக்கவிருக்கிறார் மோகன்லால். இதில் பிரியதர்ஷன் இயக்கவுள்ள படம், அவர் இயக்கும் 100-வது திரைப்படமாகும். இது குறித்த அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பே வந்திருந்தது. அதேபோல, ஜீத்து ஜோசப் மற்றும் மோகன்லால் கூட்டணியில் சில மாதங்களுக்கு முன்பு 'த்ரிஷ்யம் 3' திரைப்படம் வெளியாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த ஹிட் கூட்டணி மீண்டும் இணையவிருக்கிறது. இயக்குநர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில், மோகன்லால் நடித்திருந்த 'ஹ்ருதயபூர்வம்' படம் கடந்த ஆண்டு வெளியாகியிருந்தது. Mohanlal அதனைத் தொடர்ந்து மீண்டும் அவர் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கவிருக்கிறார். அதோடு அவருடைய மகன் அனூப் சத்யன் இயக்கத்திலும் மோகன்லால் நடிக்கவிருக்கிறார். சீனியர் இயக்குநர்களோடு மட்டுமல்லாமல், புதிய தலைமுறை இயக்குநர்களுடனும் இணைந்து மோகன்லால் களமிறங்குவது, அவரது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://cinema.vikatan.com/mollywood/mohanlal-announces-7-new-films-priyadarshan-jeethu-joseph-lineup




