மும்பை, மும்பை குர்லா பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 முதல் 5 பேர் வரை இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குர்லா அருகே உள்ள சிராக் நகர் பகுதியில் கவுசியா சாவ்ல் என்ற குடியிருப்புப் பகுதியில் அதிகாலை 3.48 மணியளவில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. மலையடிவாரத்தின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்ததில், அதன் மண் மற்றும் இடிபாடுகள் அருகில் இருந்த 2 முதல் 3 வீடுகளின் மீது விழுந்தன. இதில் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து மும்பை தீயணைப்புப் படையினர், போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்த நிலச்சரிவில் உயிரிழந்த 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் 2 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளுக்குள் மேலும் 4 முதல் 5 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், அவர்களை உயிருடன் மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் பருவமழைக்கு மத்தியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/landslide-in-mumbai-2-dead-fears-that-many-may-be-trapped-rescue-operations-in-full-swing




