டெல் அவிவ் விமான தகர்ப்பு சதியை முறியடித்த சம்பவத்தில், இந்திய விமானியை வணங்குகிறேன் என இஸ்ரேல் பிரதமர் நெகிழ்ச்சியுடன் சமூக ஊடகத்தில் பதிவிட்டு உள்ளார். துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி எப்.இசட்.1073 என்ற எண் கொண்ட பிளைதுபாய் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அப்போது நடுவானில் விமானிகள் இடையே கடும் சண்டை நடந்தது. ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானி திடீரென எழுந்து, தலைமை விமானியாக (கேப்டன்) இருந்த இந்திய விமானி ஸ்மித் மச்சாரை கத்தியால் குத்தி கடுமையாக தாக்கினார். இதில், அவர் படுகாயமடைந்து சரிந்து விழுந்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பாராட்டு எனினும், கத்திக்குத்து காயங்களுடன் இருந்தபோதும், துணிச்சலாக போராடிய மச்சார், விமானியின் கதவை திறந்து விட்டார். உடனே உள்ளே வந்த சக பயணிகள், பணியாளர்கள் சக விமானியை தடுத்து, கயிற்றை கொண்டு கட்டிப்போட்டனர். இதனால், விமானத்தை தகர்க்கும் சதி முறியடிக்கப்பட்டது. 174 பயணிகள் உயிர்தப்பினர். இந்த நிலையில், பாதுகாப்பாக இஸ்ரேலுக்கு திரும்பிய பயணிகளை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சந்தித்து பேசினார். அப்போது அவர், பெரிய பேரிடரை தவிர்க்கும் வகையில் மச்சார், பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் செயல்பட்டு உள்ளனர் என கூறினார். பயணிகள் அச்சம் துணிச்சலாக செயல்பட்ட மச்சாரை தனிப்பட்ட முறையில் பாராட்டினார். இந்த நிலையில், விமான பயணி அஸ்ஸாப் ரஜுவான் கூறும்போது, விமானத்தில் தாக்குதல் நடத்தியவர் கட்டுப்படுத்தப்பட்டு விட்டார். எனினும், பயணிகள் அனைவரும் அச்சத்துடனேயே இருந்தனர். யாரை நம்புவது என்றே தெரியவில்லை. நாங்கள், பணய கைதியாக பிடிபட்ட சூழலிலேயே காணப்பட்டோம். எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. விமான பணியாளர்களையே சந்தேகிக்க தொடங்கினோம். நாங்கள் எங்கே இருக்கிறோம், எங்கே விமானம் தரையிறங்கும் என்பது தெரியவில்லை என்றார். எனினும், விமானம் சவுதி அரேபியாவில் பாதுகாப்பாக தரையிறக்கம் செய்யப்பட்டது. அதன்பின்னர் இஸ்ரேலுக்கு மற்றொரு விமானத்தில் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/world/mid-air-stabbing-and-chaos-didnt-know-who-to-trust-shocking-accounts-from-flight-passengers




