நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா நாயகியாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஸ்மயா மோகன்லாலின் அறிமுகப் படம் இந்திய அளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் மோகன்லால். குறிப்பாக மலையாள சினிமாவின் வர்த்தகத்தை உலக அளவில் கொண்டு சென்ற முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் திகழ்கிறார். இவரது மகள் விஸ்மயா மோகன்லால், ‘துடக்கம்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமானார். மோகன்லாலின் மகள் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகமான விஸ்மயா, ‘துடக்கம்’ படத்தில் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். விஸ்மயா மோகன்லால் நடித்துள்ள ‘துடக்கம்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கியிருந்தார். இப்படத்தில் மோகன்லால், ஆஷிஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருந்தார். ‘துடக்கம்’ திரைப்படத்தில் ஆபத்திலிருந்து தப்பிக்கும் தற்காப்புக் கலை தெரிந்த பெண்ணாக அவர் நடித்திருந்தார். மர்மமான நபரால் குறிவைக்கப்பட்டு ஆபத்தில் சிக்கும்போது, அதிலிருந்து தப்பிக்க அவர் மேற்கொள்ளும் சண்டைக் காட்சிகளும் தற்காப்புக் கலைத் திறன்களும் மற்றும் அவரது ஆக்சன் தோற்றமும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. இப்படம் செப்டம்பர் 18ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது. புதிய படத்தின் அறிவிப்பு இந்த நிலையில், விஸ்மயா மோகன்லால் அடுத்ததாக கியூப் பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை அருண் போஸ் இயக்க, ரதீனா சுஹாஸ் திரைக்கதை எழுதியுள்ளார். View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/vismaya-mohanlals-new-movie-announced




