ஐதராபாத், தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், கச்சிபவுலி, இந்திரா நகரில் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் ஐதராபாத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஊழியராக வேலை செய்து வருகிறார். அதே நிறுவனத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் பாதுகாப்பு ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று பணி முடிந்து இளம்பெண் கால் டாக்சியை வரவழைத்து அதில் ஏற முயற்சி செய்தார். அப்போது ராஜ்குமார் அந்த இளம்பெண்ணை பிடித்து இழுத்துச் சென்று கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். இதனை சற்றும் எதிர்பாராத இளம்பெண் கத்தி கூச்சலிட்டார். இதனால் பயந்து போன ராஜ்குமார் இளம்பெண்ணை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இளம்பெண் இதுகுறித்து கச்சிபவுலி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ராஜ்குமார் இளம்பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த ராஜ்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/security-guard-arrested-for-assaulting-woman-attempting-to-board-cab




