மதுரை, திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்ய கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என அறநிலையத்துறை சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. திருப்பரங்குன்றம் மலை மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், திருப்பரங்குன்றம் மலைப்பகுதி முழுவதையும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்றும், தொல்லியல் துறையினரிடம் அனுமதி பெற்ற பிறகே திருப்பரங்குன்றம் மலை மீது ஏறி செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்கும்படி மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்ததில் 5 ஏக்கர் பரப்பளவு வித்தியாசம் உள்ளது. இதனால் மீண்டும் அளவீடு செய்து இருக்கிறோம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதே நேரத்தில் இந்த வழக்கில் அறநிலையத்துறையின் கருத்தையும் தெரிவிப்பதற்கு கூடுதல் மனு தாக்கல் செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என கடந்த விசாரணையின்போது கோரப்பட்டது. அதற்கு நீதிபதிகள் அனுமதி வழங்கியிருந்தனர். இடையீட்டு மனு இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஸ்ரீமதி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத்துறை சார்பில் தாக்கல் செய்த இடையீட்டு மனுவில் கூறியிருந்ததாவது:- இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் அறநிலையத்துறையை எதிர்த்தரப்பாக சேர்க்கப்படவில்லை. திருப்பரங்குன்றம் மலையின் நில அளவை குறித்து எங்களுக்கு எந்த நோட்டீசும் வழங்கப்படவில்லை. திருப்பரங்குன்றம் மலையின் நிர்வாகத்தில் அறநிலையத்துறை கமிஷனர், துணை கமிஷனர் ஆகியோர் உள்ளனர். எனவே இந்த விவகாரத்தில் மலையை அளவீடு செய்யும் போது மேற்கண்ட அதிகாரிகளின் கருத்துக்களை கேட்காமல் நில அளவைக்கு அனுமதிப்பது கோவிலின் உரிமையை பாதிக்கும். சுமார் 172 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த முழு மழையும் தொல்லியல் நினைவுச்சின்னம் என்ற அடிப்படையில் கணக்கெடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. வாபஸ் பெற வேண்டும் இது மலையின் பதிவு ஆவணங்கள் உள்ளிட்டவைகளுக்கு முரணானதாகும். இந்த மலையை பொருத்தவரை மத்திய தொல்லியல் துறை எந்த நடவடிக்கை எடுத்தாலும் அனைத்து தரப்பினருக்கும் தகவல் தெரிவிப்பது அவசியம். எனவே திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும்படி இந்த கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு இடையீட்டு மனுவில் கூறப்பட்டு இருந்தது. பின்னர் அறநிலையத்துறை சார்பில் தாக்கல் செய்த இடையீட்டு மனுவுக்கு மனுதாரர் உள்ளிட்டோர் பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் மாதம் 2-வது வாரத்துக்கு ஒத்திவைத்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/order-to-survey-thiruparankundram-hill-must-be-withdrawn-hrce-department-files-petition




